பாரம்பரிய நீர் சேமிப்பு முறைகள் மூலம் தண்ணீர் பஞ்சமே இல்லாமல் செழிப்பான வாழ்க்கையை வழி நடத்துகின்றனர் வடகிழக்கு மாநில மக்கள். பருவ மழைக் காலங்களில் அதிக படியான மழையால் வெள்ளமும் மழை இல்லா காலங்களில் நீர் பஞ்சமும் மலைப்பகுதி குடியிருப்புகளில் நீடித்து இருக்கும்.
ஆனால், ஜபோ, சியோ - ஒழி, மூங்கில் சொட்டு நீர் பாசனம் ஆகிய பாரம்பரிய முறைகள் மூலம் நீர் மேலாண்மையில் முன்னோடிக ளாக உள்ளனர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள். ஜபோ என்பது ஓடும் நீரை ஒரே இடத்தில் நீரை வழியச் செய்து சேமிப்பது ஆகும்.
இதனாலே மழை பெய்தாலும் பெய்யா விட்டாலும் நாகாலாந்து மக்கள் தண்ணீர் பஞ்சத்தைத் தவிர்த்து வருகின்றனர். மழை நேரங்களில் மலைச் சரிவுகளில் குளங்கள் வெட்டி அந்த நீரை சேமித்து விவசாயம், மீன் வளர்ப்பு என அசத்துகின்றனர்.
நெல் வயல்களில் வாய்க்கால் முறை மூலம் நீரை தேக்கி அதில் மீன் வளர்ப்பும் செய்கின்றனர் வடகிழக்கு மக்கள். சியோ - ஒழி மற்றும் மூங்கில் சொட்டு நீர் பாசனம் ஆகிய இரண்டும் மூங்கில் தண்டுகள் மூலம் மழை நீரை சேமிக்கும் ஒரு முறை ஆகும்.
குறைவான தண்ணீர் தேவைப்படும் மிளகு விவசாயத்து க்கு இந்த சொட்டுநீர் சேமிப்பை பாசனத்துக்கு உபயோகிக் கின்றனர்.
வடகிழக்கு இந்தியாவில் நீர் மேலாண்மைக் காகப் பயன் படுத்தப்படும் அத்தனை முறைகளும் இரண்டு நூற்றாண்டு களுக்கும் மேலாகவே அப்பகுதிகளில் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments