கூட் ரோட்டில் ரத்த காயங்களுடன் திருநங்கை அபிராமி பிணமாக விழுந்து கிடந்த சம்பவம் விழுப்புரத்தை உறைய வைத்துள்ளது. அபிராமியை இவ்வளவு கொடூரமாக கொன்றவர்கள் யார் என்ற விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
விருத்தாசலம் கீரப்பாளையம் பகுதியை பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவர்தான் பின்னாளில் அபிராமியாக உருமாறினார். திருநங்கை அபிராமிக்கு 35 வயசு. விழுப்புரம் அய்யன் கோவில்பட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ் சாலையில், அதாவது விழுப்புரம் - செஞ்சி கூட்டுரோடு அருகே உடம்பெல்லாம் ரத்தம் வழிந்த நிலையில், பல காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இன்று காலை இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் இது சம்பந்தமாக விசாரணையை கையில் எடுத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட திருநங்கையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக தாலுக்கா போலீசார், வழக்கு பதிவு செய்து 10 திருநங்கை களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் பிரச்சனை காரணமாகவே இக்கொலை சம்பவம் நடந்திருக்கக் கூடும் என சொல்லப் படுகிறது.
மற்றொரு புறம், காரில் வந்த மர்மநபர்கள் அபிராமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் அபிராமியுடன் இருந்த திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் உண்மை குற்ற வாளியையும், கொலைக்கான காரணத்தை யும் கண்டறியும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
கொலை செய்ததாக சொல்லப்படும் மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments