லேட்டா வந்தா குற்றமா.. வெளியே நிற்க வைத்த வேலம்மாள் - மதுரையில் !

0
3 நிமிஷம் ஸ்கூலுக்கு லேட்டாக வந்துட்டாங் களாம் பிள்ளைகள். அதுக்காக இரும்பு கேட்டுக்கு வெளியே நிக்க வெச்சு தண்டனை தந்திருக்கி றார்கள். 
லேட்டா வந்தா குற்றமா.. வெளியே நிற்க வைத்த வேலம்மாள்



அதுவும் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளு க்கு.. கண்டிப்பு க்கும், ஒழுங்குக்கும் பெயர் போன மதுரை வேலம்மாள் பள்ளியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை முகப்பேரில் 33 வருஷங்களு க்கு முன்பு துவங்கப்பட்ட வேலம்மாள் பள்ளிக்கூடம், இன்று பல மாவட்டங்களில் 40 பள்ளிக் கூடங்களாக, கல்லூரிகளாக, ஆஸ்பத்திரியாக உயர்ந்து உள்ளது. நல்ல காசு.. நல்ல படிப்பு.. ஒழுக்கம்.. ரொம்ப கண்டிப்பு.. 
இதெல்லாம் தான் வேலம்மாள் பள்ளிக் கூடத்தை இந்த அளவுக்கு அசுர வளர்ச்சி பெற வைத்தது. ஆனால் இந்த கண்டிப்பு இப்போது ஓவர் டோஸ் ஆகி விட்டது. மதுரையில் உள்ள வேலம்மாள் பள்ளியில் லேட்டாக 3-ம் வகுப்பு மாணவர்கள் வந்துள்ளனர். 

வெறும் 3 நிமிஷம் லேட்டுதான். அதற்காக அந்த பிள்ளைகளை இரும்பு கேட்டுக்கு வெளியே நிறுத்தி தண்டனை தந்திருக்கி றார்கள். ஸ்கூல் கேட்டை மூடி விட்டால் பிள்ளைகளு க்கு எப்படி பாதுகாப்பு? ரோட்டில் ஏதாவது குழந்தைகளு க்கு நேர்ந்தால் யார் பொறுப்பு? 



பள்ளியை நம்பிதானே பெற்றவர்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள்? இப்படித் தான் 2 குழந்தைகள் காலை முதல் மாலை வரை வெயிலில் காய்ந்து போய் நின்று கொண்டு இருந்திருக்கி றார்கள். ஒரு நிமிஷம் லேட்டாக வந்து விட்டால் கேட் மூடி விடுவார்களாம். 

கட்டுப்பாடு என்றாலும் அதற்கு ஒரு அளவு வேண்டாமா? நேரம் தவறாமல் வர வேண்டும் என்றால், இப்போதுள்ள காலக்கட்டத்தில், இப்போ திருக்கும் போக்கு வரத்து நெரிசலுக்கு எப்படி ஒத்து வரும்? என்பது தெரிய வில்லை. 
ஆனால் எந்த கட்டுப் பாட்டுக்கு வேலம்மாள் பெயர் வாங்கியதோ, இப்போதே அதே கட்டுப் பாடுகளுக்கு பெற்றோர் மற்றும் பொது மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings