நாளையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர்... ஜோலார் பேட்டையில் சோதனை !

0
சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பற்றா குறையை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையி லிருந்து ரயில் மூலம் 
நாளையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர்... ஜோலார் பேட்டையில் சோதனை  !
காவிரி உபரி நீரைக் கொண்டு செல்வதற்காகத் தமிழக அரசு ரூ.65 கோடியை ஒதுக்கி யிருக்கிறது. இதற்கான பணிகள் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. 

அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்தனர். மேட்டு சக்கர குப்பத்தில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி யிலிருந்து சுண்ணாம்புக் காளை வழியாக 

பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரையில் மூன்றரை கிலோ மீட்டருக்கு ராட்சத பைப் லைன் இணைக்கப் பட்டு 99 சதவிகிதப் பணிகள் நிறைவடைந் திருக்கின்றன.
இன்று இரவுக்குள் 100 சதவிகித பணிகளை முடிப்பதற் கான ஆயத்த வேலை போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. 

உடனடியாக சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டு நாளை முதல் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக் கிறார்கள்.

தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் நான்கு தவணைகளாக சென்னை க்குக் கொண்டு செல்லப்படுகிறது. 

இதற்காக தலா 50 வேகன்கள் கொண்ட இரண்டு ரயில்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. ஒரு வேகனில் 55,000 லிட்டர் தண்ணீர் நிரப்பலாம். 
நாளையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர்... ஜோலார் பேட்டையில் சோதனை  !
அப்படி யெனில், ஒரு நடைக்கு ஒரு ரயிலில் இரண்டரை மில்லியன் லிட்டர் தண்ணீரை எடுத்துச் செல்லலாம். இதற்காக ரயில்வேக்கு தமிழக அரசு கோடிக் கணக்கான ரூபாயைக் கட்டணமாக செலுத்துகிறது. 
ஜோலார் பேட்டை யிலிருந்து வில்லிவாக்கம் செல்ல ஒரு லிட்டருக்கு 34 பைசா என்று செலவிட்டு ஒரு நடைக்கு 8.6 லட்சம் ரூபாயைக் கட்டணமாக கொடுக்கிறது. 

30 நாள்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்ல ரயில்வேக்கு ரூ.7.74 கோடியைக் கட்டணமாக தமிழக அரசு செலுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக் கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings