சந்திரயான் -2 GSLV-Mk0III-M1 ராக்கெட் மூலமாக இன்று மதியம் 2.43 மணி நேரத்திற்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை விஞ்ஞானிகள் ஒருவருக் கொருவர் கட்டிப் பிடித்து கொண்டாடினர்.
இதன் பின்னர், இஸ்ரோ தலைவர் கே.சிவன் நிருபர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் உரை யாற்றினார்.
அவர் கூறியதாவது:
நாங்கள் தவறுகளை சரி செய்து விட்டு, மீண்டும், களத்தில் குதித்தோம். தொழில்நுட்ப கோளாறால் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலை சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட முடிய வில்லை.
ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் நாங்கள் எங்கள் பாதைக்கு திரும்பினோம். தேவைப்படும், திருத்தங்கள் செய்யப் பட்டன. சில, சோதனைகள் செய்யப்பட்டு, எல்லாம் நன்றாக இருப்பது உறுதிப் படுத்தப் பட்டது.
இது இஸ்ரோ விஞ்ஞானி களால் சாத்தியமானது, அவர்களுக்கு வணக்கம் செலுத்துவது எனது கடமை.
ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.III-எம் 1 வெற்றிகரமாக சந்திராயன்- 2 விண்கலத்தை பூமி சுற்றுப் பாதையில் செலுத்தியதை, அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன்.
இந்தியாவின் நிலவு நோக்கிய பயணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தினம் இது. இந்தியா மட்டுமின்றி உலகமே இதை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது.
தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் மட்டுமே இந்த மிஷன் சாத்தியமானது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த குழு இரவு, பகல் பார்க்காமல் உழைத்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டின் செயல்திறன் 15% அதிகரிக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments