உலகக் கோப்பை அரை யிறுதிக்குள் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் நுழைந்தன. அரை யிறுதியின் முதல் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. மான்செஸ்டரில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப் பட்டது. நேற்றும் ஆட்டம் தொடர 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை அந்த அணி எடுத்தது.
240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், இந்திய அணி பேட்டிங்கின் போது, 48 -வது ஓவரில் ஃபெர்குசன் வீசிய பந்தில் தோனி ரன் அவுட்டானார்.
அவர் ரன் அவுட்டான போது, 30 யார்டுக்கு வெளியே 6 வீரர்கள் ஃபீல்டிங்கில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர். ஐ.சி.சி விதிகளின்படி, கடைசி பத்து ஓவர்களில் அதிக பட்சம் 5 ஃபீல்டர்கள் மட்டும் தான் 30 யார்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப் பட்டிருக்க வேண்டும்.
Am I the only one to see this???— WAni BaSit (@imphoenixbmw) July 10, 2019
Just before MSD got Run-out, six fielders were outside the circle
Don't know whether it is umpiring fault or GPS error
BTW, it was still a runout...#Dhoni #DhoniAtCWC19 #INDvNZ #CWC19 @msdhoni @imVkohli @ICC @BCCI @htTweets @Dhoni7_fc pic.twitter.com/75ToHp0UXZ
ஆனால் விதிமீறி 6 பேர் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர். அம்பயர் இதைக் கவனிக்கத் தவறி விட்டார் என்று வீடியோக்கள் வைரலாகின. அம்பயர் இதைக் கவனித்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் என்று சமூக வலை தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
இது தொடர்பான ஃபீல்டிங் நிறுத்தி வைக்கப்பட்ட மைதானத்தின் புகைப் படத்தையும் அவர்கள் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் திரையில் காண்பிக்கப்பட்ட கிராபிக் காட்சியில் கூட பிழை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.
Glaring umpiring error? Could they afford this in a World Cup semi final? 6 players outside the circle... how long did they play like that in P3? #INDvNZL #Dhoni pic.twitter.com/Hb5UlA4tsI— Anand Narasimhan (@AnchorAnandN) July 10, 2019
மேலும் அந்தக் குறிப்பிட்ட பந்துக்கு முன்னர் தேர்ட் மேன் ஃபீல்டர் 30 யார்டு வட்டத்துக்குள் அழைக்கப் படுவதாகவும் கமென்டரியில் வருகிறது. ஒரு வேளை 6 ஃபீல்டர்கள் இருந்து அதனை நடுவர் கவனித்திருந் தாலும், அது நோ-பால் என்று அறிவிக்கப் பட்டிருக்கும்.
ஒரு ஃப்ரீ-ஹிட் கிடைத்திருக்கும். அதை எதிர் கொள்ள அப்போதும் தோனி களத்தில் இருக்க மாட்டார். காரணம் நோபாலில் ரன் அவுட் திரும்பப் பெறப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments