எதற்காக இந்த சந்திரயான் 2 அனுப்பப்படுகிறது !

0
இஸ்ரோவின் குறிக்கோள்களில் முக்கியமானது விண்வெளித் தொழில் நுட்பத்தின் மூலம் சாமானியர் களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது போன்றவை தாம்.
சந்திரயான் 2



"இத்தனை வருட பயணத்தில் இந்த இரண்டையும் இஸ்ரோ பூர்த்தி செய்து விட்டது" என்கிறார் சிவன். இது வரைக்கும் நாம் அனுப்பிய கண்காணிப்பு செயற்கைக் கோள்கள், தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள், நேவிகேஷன் செயற்கைக் கோள்கள் ஆகியவை இந்தத் தேவையை பூர்த்தி செய்து விட்டன.

இனி இஸ்ரோ செய்ய வேண்டியது என்ன? இங்கு தான் 'Deep Space Mission' -களின் பயணம் தொடங்குகிறது.

இது வரைக்கும் நாம் அனுப்பிய INSAT, GSAT, IRS, IRNSS செயற்கைக் கோள்கள் எல்லாமே விண்வெளித் தொழில் நுட்பத்தின் (Space Technology) வெளிப்பாடு. இவை ஏற்கெனவே இருக்கும் தொழில் நுட்பங்கள் மூலம் நமக்கு வெவ்வேறு விதங்களில் உதவுமே தவிர, புதிதாக எதுவும் செய்யாது.
சந்திரயான் திட்டத்தின் டைம்லைன்
ஆனால், சந்திரயான் 1, மங்கள்யான் போன்ற இரண்டும் விண்வெளி அறிவியலுக் கானவை (Space Science). இது தான் புதுப்புது அறிவியல் கண்டு பிடிப்புகளை நமக்கு கொடுக்கும். எதிர் காலத்தில் விண்வெளிக்குச் சென்று வாழ வேண்டு மென்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இவை தாம் நமக்குக் கற்றுக் கொடுக்கும்.

வேறு கோள்களி லிருந்து பூமிக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு வர வேண்டு மென்றால், அதற்கு இவைதாம் நமக்கு வழிகாட்டும். அப்படித் தான் சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. 

மங்கள்யான், செவ்வாயின் குணங்களை நமக்கு படம் பிடித்துக் காட்டியது. இதன் அடுத்த கட்டம் தான் சந்திராயன் 2. நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்ததோடு சந்திரயான் தன் பயணத்தை முடித்துக் கொண்டது.
பெண்கள் அதிகமாக பேச காரணம் என்ன?
ஆனால், அதைத் தாண்டியும் இன்னும் நாம் அங்கே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. நிலவில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா? தெரியாது. நிலவில் எங்கே நீர் அதிகம் இருக்கிறது? தெரியாது.

நிலவி லிருக்கும் கால்சியம், மக்னீசியம், ஹீலியம் போன்ற தனிமங்களின் அளவு என்ன? தெரியாது. இப்படி இன்னும் எத்தனையோ கேள்வி களுக்கு விடை காணத்தான் இங்கிருந்து சந்திரயான் 2 கிளம்புகிறது.

ஒவ்வொரு முறையும் செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டதைப் பார்ப்பதோடும், அந்தச் செய்தியை மட்டும் படிப்பதோடும் நாம் நின்று விடுவோம். அதற்குப் பிறகு அவை என்னா கின்றன, எப்படிப் பயணம் செய்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
சந்திரயான் 2 திட்ட விவரங்கள்
ஆனால், சந்திரயான் 2 அப்படி நாம் நின்று விடக்கூடிய தல்ல. வெற்றிகர மாக ஜூலை 15-ம் தேதி ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து விண்ணில் பாய்வதோடு சந்திரயான் வெற்றியடைந்து விடுவதில்லை.

அது வெறும் தொடக்கம் தான். அதற்கடுத்து விண்ணில் பயணம் செய்ய விருக்கும் அடுத்த 52 நாள்கள் தான் மிக முக்கியமான தருணங்கள்.

ஆனால், இந்தப் பயணம் அவ்வளவு எளிதானதல்ல. எண்ணற்ற சவால்கள் இஸ்ரோவுக்கும் சந்திரயானுக்கும் காத்திருக்கின்றன. இது எப்படி நடைபெறும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நிலவு வரை



GSLV Mk-III ராக்கெட் தான் சந்திரயானின் டெலிவரி பார்ட்னர். இதில் தான் விண்வெளிக்கு விசிட் அடிக்க விருக்கிறது சந்திரயான் 2.

முதலில் ஸ்ரீஹரி கோட்டாவி லிருந்து கிளம்பும் இந்த GSLV பூமி யிலிருந்து வெளியேறி, அடுத்த 15 நிமிடங்களில் சந்திரயானின் Composite Body-ஐ Earth Parking Orbit எனப்படும் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தும்.

இதில் Composite Body என்பது ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்றும் அடங்கிய சந்திரயான் 2. GSLV தரையிலிருந்து கிளம்பியதும் மூன்று கட்ட Propulsion Burn-களைத் தாண்டி பின்னர் சந்திரயான் 2-வை சுற்று வட்டப் பாதையில் நிறுத்தும்.
சந்திரயான் 2-வை சுமந்துசெல்லும் GSLV Mk-III
இங்கே சுற்று வட்டப் பாதையில் எதற்காக நிலை நிறுத்தப் படுகிறது, இங்கிருந்து எப்படி நிலவிற்கு பயணம் செய்ய விருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள விண்வெளி அறிவியலின் ' Orbital mechanics' ஓரளவு தெரிந்து கொள்வது அவசியம்.

பூமியை விண்ணில் சுற்றி வந்து கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் ஏன் எப்போதும் பூமியில் வந்து விழுவதில்லை என யோசித்த துண்டா. 
மனிதர்கள் முத்தமிடுவது ஏன்?
இந்தக் கேள்விக் கான விடையைத் தெரிந்து கொண்டால், சந்திரயானின் பயணமும் எளிதில் புரியும். உண்மையில் நாம் அனுப்பும் அனைத்து செயற்கைக் கோள்களும் புவியின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டு கீழே விழுகின்றன.
இஸ்ரோவில் தயாராகும் சந்திரயான் 2
ஆனால், நம் தரையில் விழுவதில்லை. அவ்வளவு தான். இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். ஒரு உயரமான கட்டடத்தின் மேல் நின்று கொண்டு, ஒரு பந்தை தூக்கி எறிந்தால் என்ன நடக்கும்? சில மீட்டர் தொலைவு அந்தப் பந்து பறந்து சென்று பின்னர் தரையில் விழும்.

இதுவே அந்தப் பந்தை இன்னும் கொஞ்சம் விசையுடன் தூக்கி யெறிந்தால் என்ன நடக்கும்? இன்னும் கொஞ்சம் தொலைவு அதிகம் பயணித்து மீண்டும் கீழே விழும். அதை விட இன்னும் கூடுதல் விசை கொடுத்து வீசினால்? அதே கதைதான்; கூடுதல் தொலைவு, பின்னர் தரையில் விழும்.

இந்த மூன்று சம்பவங் களிலும் இரண்டு ஒற்றுமையைப் பார்க்கலாம். ஒன்று, மூன்று முறையும் அந்தப் பந்து ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டு கீழே விழுந்திருக் கிறது. இரண்டு, மூன்று முறையும் அந்தப் பந்து பரவளைய வடிவில் கீழே விழுந்திருக் கிறது.

இதை வைத்து ஒரு முடிவுக்கு வரலாம். அதாவது எவ்வளவு தூரம் வீசினாலும் அந்தப் பந்து பரவளைய பாதையில் பயணித்து, கீழே விழத்தான் போகிறது.

எனவே புவியின் சுற்று வட்டப் பாதையில் அந்தப் பந்தை போதுமான அளவு வேகத்தோடு வீசினால் அது புவியின் சுற்று வட்டப் பாதையிலேயே சுற்றி வருமல்லவா? இப்படித் தான் செயற்கைக் கோள்கள் புவியைச் சுற்றி வருகின்றன.
Earth Burns-க்கு முன்பு சந்திரயான் 2



அதாவது அந்தப் பந்து போதுமான வேகத்தோடு புவியின் சுற்றுவட்டப் பாதையில் நேராகப் பயணிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் புவியின் ஈர்ப்பு விசை அதன்மீது செயல்பட்டு மீண்டும் அதை கீழிறக்கி விடுகிறது. 

இப்படி கீழிறங்கி, கீழிறங்கி புவியின் சுற்று வட்டப் பாதையில் சரியாகப் பயணிக்கிறது. ஒரு நூலில் கல்லைக் கட்டி சுற்றினால், அதன் மையத்தை நோக்கியே சுற்றுமே அப்படி. இப்படி புவிக்கு நெருக்கமாக, வளி மண்டலத்தைத் தாண்டி முதன் முதலில் செயற்கைக் கோள்கள் நிலை நிறுத்தப்படும் இடம் தான் Earth Parking Orbit. 
இப்போது புவியின் ஈர்ப்பு விசையி லிருந்து தப்பி, புவி சுற்று வட்டப் பாதையில் சந்திரயான் 2 நிலைநிறுத்தப்பட்டு விட்டது. இனி அடுத்து என்ன? Earth Burns.

சந்திரயான் 2 விண்ணுக்குச் சென்றதும் உடனே நேரடியாக வெல்லாம் நிலவை நோக்கி அனுப்பி விட முடியாது. காரணம், புவியின் ஒட்டு மொத்த ஈர்ப்பு விசையி லிருந்தும் விலகி, நிலவுக்குச் செல்ல அதிகளவிலான உந்துவிசை தேவை.

மேலும், பூமியைப் போலவே நிலவும் தன் சுற்றுவட்டப்பாதையில் பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக் கிறது. எனவே, அதை நோக்கி துல்லியமாக அனுப்புவதை விடவும், நிலவு புவிக்கு சரியான இடத்தில் வரும் போது சந்திரயானை அனுப்புவது தான் சரியாக இருக்கும்.

எரிபொருளும் நிறைய மிச்சமாகும். இது தான் இஸ்ரோவின் லாஜிக். சந்திரயான் 2 பயணிக்கப் போகும் இதே ரூட்டில் தான் சந்திரயான் 1-ம் பயணம் செய்தது. சரி, மீண்டும் கதைக்கு வருவோம். இப்போது புவியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிற சந்திரயான் 2 தனது Propulsion System மூலமாக பூமியை வட்டப் பாதையியில் சுற்றி வந்து கொண்டிருக்கும்.

புவிக்கு மிக நெருக்கமாக சுற்றி வந்து கொண்டிருப்ப தால் வேகமும் அதிகமாக இருக்கும். தற்போது இந்த வட்டப் பாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக நீள் வட்டமாக மாற்ற வேண்டும்.

எப்படி? பூமியை சீராக சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான் 2, தனது Propulsion System மூலமாகக் கூடுதல் விசையைக் கொடுத்து சுற்று வட்டப் பாதையி லிருந்து சிறிதளவு விலகும். இதன்மூலம் வட்டப் பாதை கொஞ்சம் மாறும்.

இப்போது மொத்த சுற்று வட்டப் பாதையில் ஒரு முனையில் பூமி அருகில் இருப்பதால் ஈர்ப்பு விசை அதிகமாகவும் மறு முனையில் பூமி தொலைவில் இருப்பதால் ஈர்ப்புவிசை குறைவாகவும் இருக்கும்.

இதே போல ஐந்து முறை சந்திரயான் 2 தனது பாதையை மாற்றிக் கொண்டே இருக்கும். தற்போது முழு நீள் வட்டப் பாதையாக மாறி யிருக்கும் இந்தப் பாதையில், பூமிக்கு அருகே இருக்கிற முனைக்கு சந்திரயான் 2 வரும் போது ஈர்ப்புவிசை காரணமாக அதிகமாக ஈர்க்கப்படும். பின்னர் அதே அளவு வேகமாக விடுவிக்கப்படும்.
சுற்றுவட்டப்பாதையை மாற்றும் சந்திரயான் 2
இந்த நொடியில்தான் சந்திரயான் 2 மீண்டும் ஒருமுறை தன்னுடைய எரிபொருளைப் பயன்படுத்தி உந்தம் கொடுத்து சந்திரனை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கும். இப்படி ஐந்து முறை பூமியைச் சுற்றி வந்து வேகத்தை அதிகரிப்ப தற்குத் தான் Earth Burn எனப் பெயர்.

இங்கிருந்து நிலவுக்குக் கிளம்புகிறதே, அதற்குப் பெயர் Trans Lunar Injection எனப் பெயர். இது மொத்தம் 16 நாள்கள் நடக்கும். இனி இங்கிருந்து ஐந்து நாள்கள் பயணம் செய்து நிலவை நெருங்கியதும் மீண்டு மொரு சவால் காத்திருக்கிறது.

பூமியைப் போலவே நிலவின் ஈர்ப்புவிசையும் சந்திரயானை பாதித்து விடலாம். எனவே, இப்படி பூமியி லிருந்து ஐந்து முறை மெதுவாக சுற்றி சுற்றி வேகத்தை அதிகரித்ததோ, அதேபோல அங்கேயும் மெதுவாக தன் வேகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நடப்பது தான் Retro Burn.

அதாவது, எதிர்திசையில் செயல்பட்டு செயற்கைக் கோளின் வேகத்தைக் குறைப்பது. இதன்படி முதலில் நிலவை அதன் சுற்று வட்டப் பாதையில் எதிர் கொள்ளும் சந்திராயன் 2, இந்த Retro Burn மூலம் அதைத் எதிர்திசையில் நீள்வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கும்.

இதன் மூலம் நிலவின் ஈர்ப்புவிசையால் சரியாக ஈர்க்கப்பட்டு துல்லியமாக அதன் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்து விடும். இதற்கு Lunar Orbiter Injection எனப் பெயர்.

முதலில் நீள் வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கும் சந்திரயான் மெதுவாகத் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு, சரியான வட்டப் பாதையில் சுற்றும். இதற்கே 27 நாள்கள் ஆகிவிடும்.

இங்கு தான் இனி ட்விஸ்ட்டே. இதுவரைக்கும் சந்திரயான் 2-வாக ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்த அந்த Composite Body இப்போது இரண்டாகப் பிரியத் தொடங்கும்.

இந்தப் புள்ளி யிலிருந்து இனி ஆர்பிட்டர் தனி, லேண்டர் (விக்ரம்) தனி. ஆர்பிட்டர் இதே வட்டப் பாதையில் நிலவை அடுத்த ஒரு வருடத்துக்குச் சுற்றி வந்து நமக்காகத் தகவல்களைச் சேகரிக்கும். அடுத்து லேண்டர் என்னாகிறது என்பது க்ளைமாக்ஸ்.
நிலவை நோக்கி பயணத்தைத் தொடங்கும் சந்திரயான் 2



ஆர்பிட்டரிலிந்து பிரிந்ததற்குப் பிறகு நான்கு நாள்களுக்கு விக்ரம் சந்திரனை மெதுவாகச் சுற்றி வந்து வேகத்தைக் குறைத்துக் கொண்டே வரும். இறுதியில் சரியான சமயம் பார்த்து நிலவில் விக்ரம் கால்பதிக்கும். இதற்கு விக்ரம் எடுத்துக் கொள்ளும் நேரம் 15 நிமிடங்கள்.
இளம் பெண்களைக் குறி வைக்கும் ஆஸ்டியோ ப்ளாஸ்டோமா !
இந்த இறுதி 15 நிமிடங்கள் தான் இஸ்ரோவின் மிக மிக முக்கியமான தருணம். இறங்குமிடம் பள்ளமா, பாறையா என்பதை யெல்லாம் சரியாகக் கணக்கிட்டு, நிலவின் தென் துருவத்தில் ஒரு நல்ல நேரத்தில் நிலாவில் வலதுகால் எடுத்து வைத்து விடும் இந்த விக்ரம்.

இதற்குப் பெயர்தான் Soft Landing. இதோடு விக்ரமின் மிஷன் முடிந்தது. இனி அடுத்தது ரோவர், பிரக்யான். சுமார் 3.8 லட்சம் கிலோ மீட்டர் பயணத்திலும் சமர்த்தாக உள்ளே உட்கார்ந்து கொண்டிருந்த பிரக்யான், இனிதான் மெல்ல தலை காட்டும். 

விக்ரம் தரை யிறங்கிய நான்கு மணி நேரத்துக்குப் பிறகு வெளியே வரும். அதன் ஆறு சக்கரங்களும் நிலவில் பதிந்துவிட்டால் இந்த மிஷன் மொத்தமும் வெற்றி தான்.

நிலவில களமிறங்கத் தயாராகும் சந்திரயான் 2
பிரக்யானின் வேகம் ஒரு நொடிக்கு ஒரு செ.மீட்டர் தான். அதனிடம் உள்ள எரிபொருளைக் கொண்டு அதிக பட்சம் அதனால் பயணம் செய்ய முடியக் கூடிய தூரமே 500 மீட்டர் தான். அதற்குள் தான் நிலவில் உலவி தன்னுடைய அறிவியல் சோதனைகளைத் தொடங்க வேண்டும்.

அடுத்த 14 நாள்களுக்கு பிரக்யான் அங்கு சோதனை செய்யும். அடுத்த தென்ன? அங்கேயே சமாதி தான். தன் பணியை முடித்துக் கொண்டு சத்த மில்லாமல் விடைபெற்று விடும் பிரக்யான்.
நிலவில் என்ன மாதிரியான தனிமங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவது மேலே சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டரின் பணி. நிலவின் நிலப்பரப்பில் இருக்கும் நீரை மற்றும் வேதிப் பொருள்களைக் கண்டறிவது பிரக்யானின் பணி.

இந்த பிரக்யான் கண்டறிந்து சொல்லும் விஷயங்களை நம் பூமியிலிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானி களுக்குச் சொல்வது விக்ரமின் பணி. ஆர்பிட்டராலும் விக்ரமாலும் பூமியை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். பிரக்யானால் முடியாது.
பிரிந்த ஆர்பிட்டர் மற்றும் லேண்டர்
அங்கிருந்து இங்கு தகவல் வந்துசேர ஆகும் சராசரி கால அளவு 2 விநாடிகள். நிலவிலிருந்து நமக்கான புகைப்படங்களை அனுப்பப் போவது பிரக்யான் தான்.

இந்த விக்ரமும் பிரக்யானும் கால்பதிக்க விருக்கும் நிலவின் தென் துருவம் இதுவரை உலகில் எந்த நாடுமே செல்லாத மற்றும் காணாத ஒரு இடம். ஏன் இஸ்ரோ இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தது என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்கிறது இஸ்ரோ.
நிலவில் என்ன செய்யவிருக்கிறது சந்திரயான் 2



முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானி களாலேயே உருவாக்கப்பட்ட சந்திரயான் 2-வில் இந்தியாவின் 620 தொழில் மற்றும் கல்வி நிறுவனங் களின் பங்களிப்பு இருக்கிறது.
முதலாவது, விக்ரம் இயங்குவதற்கு போதுமான சூரிய ஒளி தேவை என்பதால், அதற்கு இந்த இடம் மிகச் சரியாக இருக்குமாம்.
அடுத்தது, இங்கு பெரியளவில் பள்ளங்களோ, பாறைகளோ இல்லாததால் விக்ரம் இங்கே இறங்குவதும் கொஞ்சம் எளிதாக இருக்கும்.
இரண்டாவது, இந்தப் பகுதியில் தண்ணீர் வளம் அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதை உறுதிசெய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இது அமையலாம்.

இதற்கான மொத்த பட்ஜெட்டான 978 கோடி ரூபாய் மொத்தமும் இந்தியா வுடையதல்ல. எதிர்காலத்தில் நாம் பிற நாடுகளுக்கு வழங்கப் போகும் சேவைகளுக் காக அந்நாடுகள் அளித்த பணமும் கூட.
சந்திரயான் 2 முன்னிருக்கும் சவால்கள்
இந்த மொத்த பயணமும் முழு வெற்றியடைந்து விட்டால் அது இந்தியாவின் விண்வெளித் துறைக்கு மட்டுமல்ல; மொத்த அறிவியல் உலகுக்கும் அது ஒரு மைல்கல்லாக இருக்கும். சாதிக்குமா சந்திரயான்? செப்டம்பர் 6-ல் தெரியும்... விகடன்...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings