ரோஹித் ஷர்மா, ஷகிப் அல் ஹசன், மிட்செல் ஸ்டார்க் போன்ற சீனியர்கள் மேட்ச் வின்னர்க ளாக ஜொலிக்க, நிகோலஸ் பூரன், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, ஷாஹீன் அஃப்ரிடி, அலெக்ஸ் கேரி போன்ற இளரத்தங்களும் பயமின்றிப் பட்டையைக் கிளப்பு கிறார்கள்.
அலெக்ஸ் கேரி, நிகோலஸ் பூரன் |
லீக் போட்டிகள் முடிவடைந்த கடைசி வாரம், அதிகம் பேரைக் கவர்ந்த இருவர் ஆப்கானிஸ்தான் வீரர் இக்ரம் அலிகில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி. ஆப்கானிஸ் தானின் உலகக் கோப்பை 9 தோல்வி களுடன் மிக மோசமாக முடிவுக்கு வர, கடைசிப் போட்டியில் நம்பிக்கை பாய்ச்சினார் 18 வயது இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இக்ரம்.
தொடக்கப் போட்டிகளில் அவரை பேட்ஸ் மேனாகவே மதிக்காமல், 8 மற்றும் 9-வது இடங்களில் களமிறக்கியது அந்த அணி நிர்வாகம். வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில், 311 ரன்களை சேஸ் செய்யும் போது மூன்றாவது வீரராகக் களமிறக்கப் பட்டார் இக்ரம். புல் ஷாட், டிரைவ் என எல்லா ஷாட்களையும் சிறப்பாக ஆடி அதிரடி காட்டியவர் 86 ரன்கள் அடித்து அசத்தினார்.
சதமடித் திருந்தால், உலகக் கோப்பை வரலாற்றில் சதமடித்த இளம் வீரர் என்ற மகத்தான சாதனையைப் படைத்திருப்பார். இல்லை யென்றாலும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் எதிர் காலத்துக்கு மிகமுக்கிய நம்பிக்கை யாக உருவெடுத் துள்ளார்.
அடுத்து ஷாஹீன் அஃப்ரிடி. ஆரம்பப் போட்டிகளில் ஒன்றுமே செய்யாத ஹசன் அலிக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு, இவரை பெஞ்சில் அமர்த்தியது பாகிஸ்தான் அணி நிர்வாகம். ஆனால், வாய்ப்பு கிடைத்த போது அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது இந்த 19 வயது அதி வேகப்புயல்.
5 போட்டிகளில் 16 விக்கெட்டுகள், 2 முறை 4 விக்கெட், ஒரு முறை 6 விக்கெட். முகமது ஆமிரை மட்டுமே நம்பியிருந்த பாகிஸ்தான் அணிக்கு ‘நான் இருக்கேன்’ என பூஸ்ட் கொடுத்தார். தன் வேகத்தாலும், வேரியேஷ னாலும் அனைவரையும் மிரட்டினார். பாகிஸ்தானின் புகழ்பெற்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் தன் பெயரை அழுத்தமாகப் பதித்திருக் கிறார் அஃப்ரிடி!
ஹிட்மேன் தான் இந்த உலகக் கோப்பையின் சூப்பர் மேன். லீக் சுற்றின் முடிவிலேயே ஐந்து சதம், ஒரு அரைசதம். பிரேக் இல்லாத பென்ஸ் கார்போல் பாய்ந்து கொண்டிருக்கிறார் ரோஹித். வழக்கமாக, நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி விட்டு, சதமடிக்கும் போது தான் அதிரடி காட்டுவார். ஆனால், இம்முறை முதல் ஓவரிலிருந்தே வெளுக்கத் தொடங்கி விட்டார்.
எதிரணி பௌலர்களைப் போல், ரோஹித் ரசிகர்களுக்கே இது ஷாக்தான். வழக்கமாக ரோஹித் நிதான ஆட்டம் ஆட, தவான் அதிரடியாக ஆடுவார். ஆனால், தவான் காயமடைந்து, அந்த இடத்தில் ராகுல் வந்தது அணிக்குக் கொஞ்சம் பின்னடைவை ஏற்படுத்தியது. ராகுல், ஏற்கெனவே சற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் ரோஹித்துடன் இணைந்து ஓப்பனிங் இறங்கிய தில்லை. தன் முதல் உலகக் கோப்பைத் தொடரிலேயே தவானின் இடத்தை நிரப்ப வேண்டும் என்ற நெருக்கடி. ராகுலின் இந்த நெருக்கடியை ரோஹித் சரி செய்கிறார்.
தவானின் அதிரடி ஆட்டத்தை ரோஹித் கையில் எடுக்க, தன் ஆட்டத்தை நெருக்கடியின்றி கூலாக ஆடினார் ராகுல். தான் நன்றாக ஆடுவது மட்டு மல்லாமல், சக வீரரின் நெருக்கடியைக் குறைக்கும் விதம் தன் அணுகு முறையை மாற்றிக் கொண்டதற் காகவே ரோஹித்தை நிறைய பாராட்டலாம்.
களத்தில் தான் சிக்ஸர்கள் பறக்க விடுகிறார் என்று பார்த்தால், பிரஸ் மீட்டில் வேறு லெவலில் இருக்கிறார். ‘ரிஷப் பன்ட் நாலாவதா இறங்கி யிருக்காரே’ என்று கேட்டால், “நீங்கதான பன்ட் எங்க, பன்ட் எங்கன்னு கேட்டீங்க. இதோ இறங்கிட்டாரு” என்று கலாய்க்கிறார்.
எதிரணி பௌலர்களை மட்டுமல்ல, தனக்கெதிராக எதை வீசினாலும் அதை பெவிலியனு க்கு அனுப்பும் மோடில் இருக்கிறார் ஹிட்மேன்.
Thanks for Your Comments