உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகம் எதிர் பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி, நேற்று நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில், இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியை உலகமெங்கும் இருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அப்படி தான் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பேலா கிராமத்தைச் சேர்ந்த வினய் பிரகாஷ் என்பவர் கொண்டாடினார். உற்சாகத்தின் உச்சத்தி லிருந்த அவர், சாலையில் ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாடி யிருக்கிறார். அப்போது, அவருக்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டிருக் கிறது.
அவர்கள், இவரின் கொண்டாட்ட த்தைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை ஊரின் ஓரத்தில் இருந்த அவரது குடிசை தீ பிடித்து எரிந்ததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்திருக் கிறார்கள். முழுவதுமாக எரிந்த குடிசையுடன் பிரகாஷும் தீயில் கருகி பலியானார்.
இந்நிலையில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், `பலியான பிரகாஷ் பட்டிய லினத்தைச் சேர்ந்தவர், அவர் கொண்டாடு வதைத் தடுத்தவர்கள் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வாக்கு வாதத்தின் காரணமாகத் தான், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வினய் பிரகாஷை கொலை செய்து விட்டனர்'' எனக் குற்றம் சாட்டி யுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, எஸ்.சி./எஸ்.டி ஆணையம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப் பாளருக்கு உத்தர விட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாகக் கைது செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் மாவட்ட கண்காணிப் பாளருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவின் வெற்றியை நாடே கொண்டாடி வரும் இந்த வேளையில், வினய் பிரகாஷின் கொண்டாட்டம் மட்டும் சோகத்தில் முடிந்திருக்கிறது.
Thanks for Your Comments