ஜுலை 21-ம் தேதி சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து செய்யப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 21-ம் தேதி காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் மதியம் 2 மணி முதல் சென்னை கடற்கலை - வேளச்சேரி வழித்தடத்தில் ரயில் சேவைகள் தொடங்கும் என்று கூறப்பட் டுள்ளது. இதே போல், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 10.30 முதல் பிற்பகல் 3.10 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப் படுவதாகவும்,
எம்டி பிரியாணி செய்முறை !சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையே காலை 11 முதல் மதியம் 1.50 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப் படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப் படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் ரயில்சேவை தொடங்கும் நேரத்தில் கூடுதலாக 8 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நேரம், கடந்த வாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையில் 67 மின்சார ரயில்களின் சேவை நேரம் மாற்றப் பட்டது.
அப்போது, பயணிகளின் நலன் கருதி, பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சென்னை கடற்கரை யில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு சில சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments