17 வயது பெண் அண்ணன் தம்பிகள் மூவருக்கு மனைவியாக்கப்பட்ட துயரம் !

0
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்ணனின் மனைவியையே, தம்பிகளும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் குடும்ப உறவில் ஈடுபட கட்டாயப் படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
17 வயது பெண்



உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமி ஒருவரை லொறி சாரதி ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடித்து ஒரு மாத காலம் முடியும் முன்னரே அவருக்கு பேரிடியாக அந்த அதிர்ச்சி சம்பவம் நேர்ந்துள்ளது.

தமது கணவரின் இரு தம்பிகளும், தங்களின் மனைவியா கவும் அவரை நடந்து கொள்ள வற்புறுத்தி யுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அவரை கணவரே கட்டாயப் படுத்தியுள்ளார். 

மட்டுமின்றி, கணவரின் இரு தம்பிகளாலும் பலாத்காரம் செய்யப் பட்டதுடன், பாலியல் துன்புறுத்தலு க்கும் இரையாகி யுள்ளார். 
அண்ணன் தம்பிகள் மூவரும் கூட்டாக முடிவு செய்து, தங்களுக்கான நாட்களில் மட்டுமே உறவுக்கு கட்டாயப் படுத்தியதாகவும், குறிப்பிட்ட நாட்களில் எஞ்சிய இருவரும் கண்டு கொள்வதில்லை எனவும் அவர் கண்ணீருடன் நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.

குறித்த பெண் குடியிருக்கும் Baghpat மாவட்டமானது இந்தியாவில் பாலின சமநிலையற்ற பகுதிகளில் முக்கியமானது என கூறப்படுகிறது.

இதனால் திருமண மாகாத ஆண்களின் எண்ணிக்கை அதிகம் எனவும், அதிக கல்வி அறிவு மற்றும் மிகவும் ஏழையான குடும்பங்களில் உள்ள ஆண்களுக்கு பெண் கிடைப்பதில்லை எனவும் கூறப்படு கிறது.

இந்த காரணங்க ளால் சுற்று வட்டாரத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து பெண் ஒருவரை விலைக்கு வாங்கி, அவரை குடும்பத்தில் ஒருவர் முறைப்படி திருமணம் செய்து கொள்வதும், 
மூவருக்கு மனைவியாக்கப்பட்ட பெண்



எஞ்சிய சகோதரர்கள் குறித்த பெண்ணுடன் முறையற்ற உறவில் ஏற்படுவதும் வாடிக்கையாக நடந்தேறி வருகிறது.

இதுவரை Baghpat மாவட்டத்தில் மட்டும் இது போன்ற 2,100 பெண்கள் இருப்பதாகவும், அவர்களின் கதை கண்கலங்க வைப்பதாக உள்ளது எனவும் சர்வதேச ஊடக பிரதிநிதி ஒருவர் வெளிப்படுத்தி யுள்ளார்.
இந்த பெண்களில் பலரும் பிள்ளை பெற்றுக் கொண்டாலும், அவர்களில் யார் தமது பிள்ளைக்கு தந்தை என்ற குழப்பமும் நீடிப்பதாக தெரிவிக் கின்றனர்.

பெரும்பாலும் பணப் பிரச்னை காரணமாகவே இது போன்ற திருமண பந்தங்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை பெற்றோர் அனுமதிப்பதாக கூறப்படுகிறது.
தங்கள் பெண் பிள்ளைகள் படும் துயரங்கள் தெரிய வந்தும், பணம் இல்லை என்பதால் அவர்களை மீட்கவோ, பொலிசார் உதவியை நாடவோ முடியவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings