பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ளது பிசின் மாவட்டம். இங்கு பாதுகாப்பு படைப்பிரிவினர் நேற்று இரவு வழக்கம் போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் சென்ற வாகனம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொரு வீரர் படுகாயம் அடைந்தார்.
விசாரணையில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கில் வெடிகுண்டு வைக்கப்பட்டு பின்பு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப் பட்டது தெரிய வந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்க வில்லை.
கடந்த 10 நாட்களில் பலூசிஸ்தான் மாகாணத்தில் நடக்கும் 3 வது குண்டு வெடிப்பு நிகழ்வு இது என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments