டெல்லியின் வரலாற்றிலேயே முதன் முறையாக 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்து வோருக்கு மின் கட்டணம் கிடையாது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மேலும் 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்து வோருக்கு 50% மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது குறித்து துணை முதல் மந்திரி மனிஷ் சிசோதியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில், 'டெல்லிக்கு இன்று வரலாற்றில் சிறப்புமிக்க நாள். ஒவ்வொரு குடும்பமும் கண்ணிய மான வாழ்க்கைக்கு தகுதியானது.
சிறந்த கல்வி மற்றும் உடல் நலம் போலவே, வீடுகளில் இயங்கும் மின் விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவற்றின் மின்சார அடிப்படை அளவும் முக்கியமானது' என பதிவிட்டுள்ளார்.
Thanks for Your Comments