சவுதியாவில் 3 அறிஞர்களுக்கு மரண தண்டனை !

0
சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமல் படுத்தப் படுகின்றன. அங்கு பெரும் குற்றம் செய்பவர் களுக்கு மரண தண்டனை விதிக்கப் படுகிறது. கடந்த மாதம் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது.
சவுதியாவில் 3 அறிஞர்களுக்கு மரண தண்டனை



2 பேர் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப் பட்டனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப் பட்டது. இந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட உள்ளது. 

ஷேக் சல்மான் அல்-அவ்தாக், அவாத் அல்-குயார்னி மற்றும் அலி அல்-ஒமாரி ஆகிய 3 பேரும் பிரபல அறிஞர்கள் ஆவர். இவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. சவுதி அரேபியா வில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது.

இதற்கு ஐ.நா சபையும் மனித உரிமைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருந்தும் அங்கு இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப் பட்டு வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings