நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேரை பயங்கர வாதிகள் கடத்தி சென்றனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பொது மக்கள் மீது அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது.
பயங்கர வாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் பேருந்துகளுக்கு தனி பாதை !
இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள ஹன்சாய் நகரின் கிராமம் ஒன்றுக்குள் திடீரென நுழைந்த போகோ ஹராம் பயங்கர வாதிகள் அங்கிருந்த பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் கொல்லப் பட்டனர். மேலும், அந்த கிரமத்தில் இருந்த வீடுகளுக்கு தீ வைத்ததோடு மட்டு மல்லாமல் 12 பேரை கடத்திச் சென்றனர்.
Thanks for Your Comments