Independence Day Speech.... மாணவர்களுக்கு 5 டிப்ஸ் !

0
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்திய தனது 73-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. 
Independence Day Speech.... மாணவர்களுக்கு 5 டிப்ஸ் !

இந்த நாளில் கருத்துகளை பரிமாறிக் கொள்வதற் காகவும், சுதந்திரத்திற்க் கான விழிப்புணர்வை மக்களிடையே 


கொண்டு செல்வதற் காகவும் நமது பள்ளிகளிலும், கல்லோரிகளிலும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்படும். 

அப்படி எதாவது போட்டியில் ஆர்வமாய் உங்கள் பெயரைக் கொடுத்து விட்டு , ஆனால் என்ன எழுதுவது? என்ன பேசுவது? என்று தெரியாமல் முழிக்கிறீர் களா?  இதோ உங்களுக்கான ஒரு ஐந்த டிப்ஸ்.

1. முதலில் நீங்கள் எந்த மையப் பொருளை முன் வைத்து பேசப் போகிறீர்கள்/எழுதப் போகிறீர்கள் என்பதை தீர்மானியுங்கள். 

உங்களால் தீர்மானிக்க முடிய வில்லை என்றால் - பின்வரும் தலைப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். 

சுதந்திரக்கு முன் இருந்த இந்தியா, சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு என்ன? சுதந்திர போராட்டத்தில் சாதாரண மக்களின் பங்கு என்ன? தனிமனித விடுதலையைப் பற்றி காந்தியடிகளின் கருத்து என்ன? 
இன்றைய இந்தியாவின் நிலை என்ன? கடந்த 72 வருடம் இந்திய அரசு சுதந்திர தாகத்தை, சுதந்திர உணர்வை எப்படி கையாண்டது? 

இந்திய உலகத்திற்கு எந்த வகையில் முன் மாதிரியாய் உள்ளது….. என்ற கோணங்களில் உங்களின் பேச்சையோ, எழுத்தையோ நீங்கள் கட்டமைக்கலாம்.

2. மேலே சொல்லப்பட்டுள்ள தலைப்பை அல்லது மையப் போருளை தேர்தெடுத்தப் பிறகு, நீங்கள் அதற்க்கான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். 


ஏனெனில் எந்த பேச்சும், எழுத்தும் தெளிவுப் படுத்தாமல், உறுதிப் படுத்தாமல் வெளியிட்டால் அது தோல்வியில் தான் முடியும். 

உங்கள் ஆசிரியர்க ளிடம் இருந்தோ, பெற்றர்வர் களிடம் இருந்தோ, நூலகத்திற்கு சென்றோ, அருங்காட்சி யத்திற்குச் சென்றோ, இன்டர்நெட்டில் இருந்தோ தகவல்களை சேகரியுங்கள்.

3. தகவல்கள் மட்டும் உங்கள் பேச்சில்/எழுத்தில் இருக்கக் கூடாது என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் பேச்சில் நல்ல தொடக்கம் , நடுத்தர மற்றும் முடிவு இருக்க வேண்டும். 

அறிமுகத்தில் உங்கள் பேச்சின் கருப்பொருளையும், அதை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதையும் தெளிவாகக் கூறுங்கள். பின்னர் உங்கள் கருப்பொருளை விரிவாகக் கூறுங்கள். 


மேலும் நீங்கள் சேகரித்த தகவல்களை எடுத்து சொல்லி உங்கள் வாதங்களை நியாப் படுத்துங்கள்.

4. சிறந்த உரைநடையோடு, இல்லக்கண வடிவோடு, பார்வை யாளர்களை உங்கள் கருத்துக்குள் கொண்டு வரும் நல்ல தமிழ் வார்த்தைகளை தேர்ந்தெடுங்கள்.
5. பேச்சை முடித்து விட்டு உடனே சென்று விடாதீர்கள். அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகளை சொல்லுங்கள். 

குறைந்த பட்சம் ஒரு நிமிடமாவது நின்று பார்வை யாளர்களின் தரப்பில் ஏதேனும் கேள்வி வருகிறதா? என்பதை பார்த்து விட்டு மேடையையை விட்டு இறங்குகள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings