கர்நாடகவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று வீட்டின் மேற்கூரையில் ஜம்முன்னு செட்டிலான திக் திக் வீடியோ வெளியாகி யுள்ளது. கடந்த சில மாதங்களாக எல்லா மாநிலங்களிலும் மழையின் தாக்கம் சற்றும் அதிகாமே உள்ளது.
இது மழையோடு நின்று விடாமல் வெள்ளம் வரையிலும் தீவிரம் அடைகிறது. சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் உருண்டோடிய வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம்.
வெள்ளத்தால் காடுகளில் இருந்தும் முதலைகள், பாம்புகள் ஆகியவையும் அடித்து வரப்பட்டன. சாலைகளில் அசால்ட்டாக முதலைகள், பாம்புகள் மக்களின் கண்களுக்கு தென்னப்பட்டன.
இந்நிலையில், இப்போது கர்நாடக மாநிலத்தில் வெள்ளம் பெருகெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.இங்கு தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள தால் கனமழை பெய்து வருகிறது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் முழங்கால் அளவிற்கு சாலைகளில் வெள்ளம் பாய்ந்து கொண்டிருக் கின்றன. பொது மக்கள் அனைவரையும் பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளன.
#WATCH A crocodile lands on roof of a house in flood-affected Raybag taluk in Belgaum. #Karnataka (11.08.19) pic.twitter.com/wXbRRrx9kF— ANI (@ANI) August 12, 2019
மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. சமூக வலைத் தளங்களில் கர்நாடகா மழை வீடியோக்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது முதலையின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கர்நாடகா பெல்காம் மாவட்டத்தில் உள்ள ரேபேக் தாலுக்காவில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்கு வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று வீட்டின் மேற்கூரை மீது இருக்கும் அமர்ந்துக் கொண்டிருக்கிறது.
முழு வீடும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், முதலை தப்பித்து வீட்டின் கூரை மீது தஞ்சம் அடைந்தது. இந்த அதிர்ச்சி வீடியோ பார்ப்பவர் களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments