கோவை இருகூர் அருகே ஒரு தனியார் மில் உள்ளது. இங்கு வெளியூரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்கள் 7 வயது குழந்தையுடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
அவர்களது வீடு அருகே கும்பகோண த்தை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது26). என்பவர் தங்கி யுள்ளார். இவரும் அதே மில்லில் பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று ஆனந்தகுமார் தனது வீட்டின் அருகே உள்ள 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியான சிறுமி சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளது. இதை யடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து சிங்காநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து ஆனந்த குமாரை கைது செய்ய சென்றார். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.
தனிப்படை யினர் வாலிபரை தேடி அவரது சொந்த ஊரான கும்பகோண த்திற்கு விரைந்துள்ளனர்.
Thanks for Your Comments