வெற்றி என்பது பணத்தின் அடிப்படையில் வருகிறது என்பதை நினைக்கும் போது, நல்ல வேட்பாளர்கள் ஜெயிக்க முடிய வில்லையே என்கிற மனவருத்தம் ஏற்படுகிறது" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் லஞ்சலாவண்யம் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை யிடம் பேசினோம். "பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல் நிச்சயமாக ஒழிந்திருக் கிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் டெல்லிக்குச் செல்லும் போது, அக்கட்சியின் அமைச்சர்கள் இருக்கும் வளாகத்தில், அவர்களின் செயலாளர் களை விட இடைத்தரகர்கள் தான் அதிகமாக சுற்றிக் கொண்டிருப் பார்கள். இன்றைக்கு இடைத் தரகர்கள் இல்லாமல் எல்லாத் திட்டங்களும் நிறை வேறுகின்றன.
தற்போது வியாபாரிகள், விற்பனை யாளர்கள், தொழில் முனைவோர் களிடம் கேட்டால், இணைய தளத்தில் அப்ளை பண்ணினால் போதும். எங்களுக்கு உடனடியாக ஆர்டர் கிடைத்து விடுகிறது என்று சொல்கிறார்கள்.
இதனால், இடைத்தரகர்கள் ஒழிக்கப் பட்டிருக்கி றார்கள். இன்னொன்று, மக்களுக்கு நம்பிக்கை கிடைத்திருக் கிறது. இவ்வளவு பணத்தை கொடுத்தால் தான் தொழில் செய்ய முடியும் என்ற நிலையில், நியாயமான நிறுவனமாக இருந்தால் நமக்குக் கிடைக்கும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக் கிறது.
4 லட்சம் போலி நிறுவனங்களை மோடி அரசு ஒழித்துக் கட்டியிருக் கிறது. வருமானவரி கட்டுபவர்கள், இரண்டு மடங்காகி இருக்கிறார்கள். லஞ்சம் தானே, அது இருக்கிறது தானே... என்ற நிலை மாறி, லஞ்சலாவண்யம் இல்லாத ஆட்சி நடக்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது.
பணத்தைக் கொடுத்து உடனே வாங்கிவிடலாம் என்கிற மனநிலை மக்கள் மத்தியில் இருக்கிறது. லஞ்சம் எங்கே ஆரம்பிக்கிறது என்றால், பிறந்த குழந்தை யிலிருந்து. எல்லா இடங்களிலும் கமிஷன். ஊழல் இல்லாத நிர்வாகத்தைக் கொடுப்பது
எவ்வளவு சிரமம். ஒரு சின்னப் பொறி இருந்தால் கூட வெளியில் வந்து விடும். 'ரஃபேல்... ரஃபேல்' என்றார்கள். ரஃபேல் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. கடைசியில் ஒன்றும் இல்லாமல் ஆகி விட்டது. சாலைப் போக்கு வரத்தைப் பொறுத்த வரை விதி முறைகளை மீறிப் பயணிப்பவர்கள் அதிகம்.
இந்த விதி முறைகளைக் கடினப்படுத்திய பிறகும் கண்காணிப்பு கேமரா வைத்த பிறகும், சென்னை அண்ணா நகரில் மட்டும் ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பேர் பிடிபட்டனர்.
ஆனால், இந்த 90 ஆயிரம் பேர் எப்படி தப்பித்துப் போனார்கள். இது குறித்து நான் யாரையும் குறை சொல்ல வில்லை. பணம் வைத்திருப்ப வர்கள், மிகவும் உயர்ந்த தளத்தில் இருக்கிறார்கள். மற்ற வேட்பாளர்கள் ஜெயிக்க முடிய வில்லை.
அதிக பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிற அரசியல் வாதிகள், இவ்வளவு பணத்தை நான் செலவு பண்ணினால் தான் அடுத்த தேர்தலைச் சந்திக்க முடியும் என்று நினைக் கிறார்கள்.
வெற்றி என்பது பணத்தின் அடிப்படையில் வருகிறது என்பதை நினைக்கும் போது, நல்ல வேட்பாளர்கள் ஜெயிக்க முடிய வில்லையே என்கிற மனவருத்தம் ஏற்படுகிறது" என்றார்.
Thanks for Your Comments