திருச்சி கருமண்டபம், பிராட்டியூர், தீரன்நகர் பகுதிகளில் ஏராளமானோர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார்கள். சமீப காலமாக அடிக்கடி இந்த மாடுகள் காணாமல் போயின.
ஒவ்வொன்றும் ரூ.50 ஆயிரம் வரை மதிப்புள்ள இந்த மாடுகள் தினமும் 10 லிட்டர் வரை பால் கொடுப்பவை.
மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பும் உரிமை யாளர்கள் மாலை நேரங்களில் மாடுகள் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்தனர்.
மாடுகள் மேய்ந்த இடத்தில் சென்று பார்த்த போது அவை காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டனர்.
மாடுகளை திருடும் கும்பல் யார், அதை எப்படி கடத்தி செல்கிறார்கள்? என்று தீரன்நகர் பகுதியில் மாடு உரிமை யாளர்கள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று மாலை 7 மணிக்கு தீரன்நகர் பஸ் நிறுத்தத்தில் மாடுகளின் உரிமையாளர்கள் மறைந்து நின்று பார்த்த போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அங்கு நின்ற விலை உயர்ந்த மாட்டை கடத்திக் கொண்டிருந்தார்.
அந்த மாட்டுக்கு வாழைப் பழங்களை கொடுத்துக் கொண்டே, அதை நைசாக கோரை யாற்றுக்கு செல்லும் வழியில் உள்ள கருவேல முள் காட்டுக்குள் ஓட்டிச் சென்றார்.
அங்கு சென்றதும் மாட்டை ஒரு மரத்தில் கட்டி விட்டு ஒன்றும் தெரியாதது போல் மீண்டும் முள் காட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்.
இதை பின் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மாடு உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் அந்த முதிய வரை மடக்கி பிடித்தனர்.
அவருக்கு தர்ம அடி கொடுத்து மாட்டை எங்கு கட்டி வைத்திருக்கிறாய் என்று கேட்டனர். முள் காட்டிற்குள் சென்று பார்த்த போது 4 மாடுகளை அவர் கட்டி போட்டிருப்பது கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.
உடனே மாடுகளை மீட்ட பொதுமக்கள் அந்த முதியவரை சோமரசம் பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீண்ட காலமாக மாடுகளை இது போன்று வாழைப் பழத்தை கொடுத்து காட்டுக்குள் அழைத்து சென்று கட்டி போட்டு விட்டு நள்ளிரவில் மினி லாரிகளில் ஏற்றி கடத்தி சென்று சந்தையில் விற்று வந்துள்ளனர்.
மாடுகளை திருடுவதற்காக அதற்கு வாழைப்பழம் கொடுக்க காந்தி மார்க்கெட்டில் அழுகிய வாழைப் பழங்களை வாங்கி சாக்கு மூட்டையில் வைத்திரு ப்பார்கள்.
ரோட்டில், வயல் வெளிகளில் திரியும் மாடுகளுக்கு அதை கொடுத்து நைசாக காட்டு பகுதிக்குள் கொண்டு சென்று கட்டி விடுவார்கள். மக்கள் நடமாட்டம் இல்லாத பிறகு கடத்துவார்கள்.
இதற்காக மினி லாரியை கோவில் அருகில் நிறுத்தி வைத்திருப்பார்கள். மாலையில் மாடுகளை திருடி இரவில் சந்தையில் விற்று இந்த கும்பல் லட்சக்கணக்கில் சம்பாதித் துள்ளது.
திருச்சியில் சொகுசு கார்களில் வந்து ஆடுகளை திருடுவது நடந்து வந்த நிலையில் வாழைப்பழம் ஆசைக்காட்டி மாடுகளை திருடும்
தொழில் தெரிய வந்துள்ளதால் மாடுகளை வளர்ப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:
Thanks for Your Comments