அயனாவரம் பொன்னுவேல் புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தணிகை வேல் என்பவரின் மனைவி ஷர்மிளா. நேற்று வெளியில் சென்ற ஷர்மிளா சாலை ஓரமாக நடந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் விளிம்பை ஒட்டி அவரைப் பின் தொடர்ந்து ஆட்டோ ஒன்று வந்தது. அதில் இருந்த ஒரு பெண், ஷர்மிளாவின் கைப்பையை பறித்துக் கொள்ளவே, ஆட்டோ வேகமெடுத்தது.
ஷர்மிளா கூச்சலிட்டதை அடுத்து அங்கு திரண்ட பொது மக்கள் ஆட்டோவை மடக்கிப் பிடித்தனர். ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், வழிப்பறி செய்த பெண் பிடிபட்டார்.
அவரை அயனாவரம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். வழிப்பறி செய்த பெண், ஆந்திராவைச் சேர்ந்த அர்ச்சனா என்பதையும், அவர் புளியந்தோப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
ஆட்டோ ஓட்டுநர்களிடம் இனிமையாகப் பேசி மயக்கி வழிப்பறிக்கு பயன்படுத்திக் கொள்வது அர்ச்சனாவின் வழக்கம் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே பூக்கடை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் ஆட்டோவில் சென்று அவர் வழிப்பறியில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டதும் போலீஸ் விசாரணை யில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அர்ச்சனாவிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணையின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம் திண்டிவன த்தைச் சேர்ந்த பிரபு என்பவரையும் கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே ஷர்மிளாவின் கணவரான தணிகைவேல், எழும்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 35 சவரன் நகைகள் அடங்கிய பையை போலீசிடம் ஒப்படைத்த தற்காக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதனின் பாராட்டைப் பெற்றவர் ஆவார்.
ஒரு பெண் ஆட்டோவில் வந்து வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறி யுள்ளார்.
Thanks for Your Comments