புவி வெப்ப மடைதலை எதிர் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசன் மழை காடுகளில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்லாயிரக் கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொலீவியன் அரச போயிங் 747 விமானம் அமேசன் காட்டுத் தீயை அணைக்க ஈடுபடுத்தப் பட்டுள்ளது.
இந்த விமானம் 70'000 லீட்டர் தண்ணீரை எடுத்துச் செல்லக் கூடியது. 4 என்ஜின் களைக் கொண்ட இந்த விமானத்தின் பைலட் மிக திறமையாக தீயணைப்பு வேலைக் காக பயிற்றப்பட்டு செயல்படக் கூடியவர் என தெரிவிக்கப் படுகிறது.
தீ பரவும் இடங்களில் தாழப் பறந்து தண்ணீரை பாச்ச விசேட பயிற்சியை பைலட் பெற்றுள்ளார்.
இதே வேளை சர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
Thanks for Your Comments