ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ.. அமலாக்கத் துறை வந்ததால் பரபரப்பு !

0
நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, கடந்த 2007 ஆம் ஆண்டில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளி நாட்டிலிருந்து 305 கோடி ரூபாய் நிதியை பெற்றது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. 
ப.சிதம்பரம் வீட்டில் பரபரப்பு



இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் பிற்பகலில் தள்ளுபடி செய்த நிலையில், மாலையில் சிபிஐ அதிகாரிகள், அவரது வீட்டுக்கு வந்தனர். சுமார் 15 நிமிடங் களுக்கு பிறகு அவர்கள் திரும்பிச் சென்றனர்.

சிறிது நேரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளும், ப.சிதம்பரம் வீட்டுக்கு வந்ததால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என்பதால் அவர்களும் திரும்பிச் சென்றனர். 

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், ப.சிதம்பரத் துக்கு சம்மன் அளித்துச் சென்றதா கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி யானதால் ப.சிதம்பர த்தை கைது செய்யும் இடைக்கால தடை நீங்கி உள்ளது. எனவே, உச்ச நீதி மன்றத்தை ப.சிதம்பரம் அணுகி உள்ளார். 

இது தொடர்பாக, நாளை புதன்கிழமை, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வார் என எதிர் பார்க்கப் படுகிறது.




Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings