மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர் !

0
சென்னையில் முதன்முறையாக மின்சார பேருந்துகளின் சோதனை முறை சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 
மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்
சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை 28 கி.மீ. தூரம் வரை மின்சார பேருந்துகள் சோதனை ஓட்டத்தில் இயக்கப்பட உள்ளன. 

பல்லவன் இல்லத்தில், பேருந்தின் பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது. பேட்டரி பேருந்தில் 32 பேர் அமர்ந்தும், 25 பேர் நின்றும் பயணிக்க லாம். 

முழுவதும் குளிர்சாதன வசதிகொண்ட பேட்டரி பேருந்தில், சிசிடிவி கேமரா வசதியும் உள்ளது. 

இது தவிர பெண்கள் மற்றும் குழந்தை களின் பாதுகாப்பிற் காக 'AMMA PATROL' என்ற பெயரில் புதிய ரோந்து வாகனத்தை யும் தமிழ்நாடு அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. 
அதன்படி முதற் கட்டமாக தலைமைச் செயலகத்தில், 40 ரோந்து வாகனங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

இதை யடுத்து, போக்குவரத்து காவல் துறையினரின் சீருடையில் பொருத்துவ தற்கான கண்காணிப்பு கேமராக்களை முதலமைச்சர் வழங்கினார். 

அதனை தொடர்ந்து தக்காளியை கூழாக்கும் இயந்திரம் கொண்ட பிரத்‌யேக வாகனத்தை முதல்வர் அறிமுகம் செய்தார். 

இந்நிகழ்ச்சி யில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings