பாம்பு போல வளர்ந்த கற்றாழை.. அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள் !

0
பாம்பு போல கற்றாழைச் செடி ஒன்று முளைத் திருப்பதை கண்டு பெண் ஒருவர் சாமி ஆட்டம் ஆடி அருள் கூறிய சம்பவம் காரைக்குடி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கற்றாழைச் செடி



காரைக்குடி அருகே உள்ள 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோவிலூர். இதை யொட்டிய திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஏராளமான புதர்ச் செடிகளும் கற்றாழைகளும் மண்டிக் கிடக்கின்றன. 

அதில் உள்ள காற்றாழைச் செடிகளில் ஒன்று மட்டும் 10 அடி உயரத்திற்கு பாம்பு போல் வளைந்து நெளிந்து இருக்கிறது. இதை அந்த வழியாகக் கடந்து செல்லும் மக்கள் முதலில் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். 
அடுத்து அருகில் சென்று அதன் வடிவம் பாம்பினைப் போல் இருப்பதைக் கண்டு இதைக் கடவுளின் அவதாரம், அதிசயம், சக்தி எனப் பேசத் தொடங்கினர். 

இச்செய்தி பல்வேறு சமூக ஊடகங்களி லும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் இந்த அபூர்வ கற்றாழையைப் பார்ப்பதற்கு மக்கள் படை எடுக்கத் தொடங்கி விட்டனர்.

அத்துடன் மட்டு மல்லாமல் ஒரு சிலர் இதற்கு மாலை அணிவித்தும், மஞ்சள், குங்குமம், சந்தனம் தெளித்தும், துண்டுகள் போட்டும் வழிபாடு செய்து வருகின்றனர். 

இந்தக் கற்றாழைக்கு தினசரி மாலை மரியாதைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைப் பார்க்க பல்வேறு ஊர்களி லிருந்தும் பெரும் மக்கள் கூட்டம் இங்கு தினமும் வந்து செல்கின்றது.

இந்நிலையில் அப்பகுதியில் கூலி வேலை செய்து கொண்டிருந்த பெண்களும் இந்த விநோதக் கற்றாழையைப் பார்க்கச் சென்றுள்ளனர். 

அப்போது அவர்களில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென பாம்பு படம் எடுப்பது போல் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு நாக்கைத் துருத்தி, கண்களை உருட்டி, பெரும் கூச்சலுடன் முட்டிக் கால் போட்டு ஆடத் தொடங்கினார். 

அந்தக் கற்றாழையை நோக்கி பாம்பைப் போல் சத்தம் எழுப்பிக் கொண்டே தவழ்ந்து சென்றார். அப்போது அருள்வாக்கு சொல்வது போல் ஆவேசமாக பேசத் தொடங்கினார்.

மேலும் அவர், “என்னை யாரும் எதுவும் அசைக்க முடியாது. இந்த உலகத்தை காண வந்திருக்கிறேன். எனக்கு இங்கு கோவில் கட்டி வைச்சுடுங்க. இதை நானாக சொல்ல வில்லை சிவனிடம் இருந்து அருள் வாங்கி வந்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார்”.
இதை அங்கு வந்திருந்தவர் களில் ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் உலவ விட்டிருக்கிறார்.

கற்றாழையின் வழிவத்திற்கு என்ன காரணம்?

இந்த பாம்பு போன்ற வடிவத்திற்கு என்ன காரணம் என்று தாவரவியல் பேராசிரியர் என்.விஜய் ஆனந்த் கூறியுள்ளார். “இந்தக் கற்றாழை அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. 
பாம்பு போல வளர்ந்த கற்றாழை



இது வறண்ட நிலங்கள் உட்பட எல்லா மண்ணிலும் வளரக் கூடியது. தன்னுடைய தண்டுப் பகுதியில் நீரைச் சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டது. இதனுடைய ஆயுள் காலம் 25 முதல் 30 ஆண்டுகள்.
இது அந்த வயதில் தான் பூக்கத் தொடங்கும். அப்படி பூத்து விட்டால் அந்தச் செடி சிறிது காலத்திலேயே மடிந்து விடும். அப்படி மலர்ந்திருக்கும் ஒரு மலர்க்கொத்து தான் இப்போது காரைக்குடி பகுதியில் உள்ள அந்தக் குறிப்பிட்ட கற்றாழையில் காணப்படுகிறது.

பொதுவாக இந்த வகை கற்றாழைப்பூ ஒரு குச்சிபோல் நீண்ட உயரத்துக்கு நேரே சென்று மலரக் கூடியது. ஆனால் இந்தக் கற்றாழையில் அப்படி அந்த மொட்டு மலரும் போது ஏதோ ஒருவித அழுத்தம் அந்தத் தண்டுப் பகுதியில் நடந்திருக்கலாம். 

அதனால் தான் அந்த நேரான மலர்த் தண்டில் வளைவு ஏற்பட்டிருக்கிறது. அடுத்து சூரிய ஒளியை நோக்கி வளரும் போது முதல் வளைவில் ஏற்பட்டது போல் அடுத்தடுத்து ஏற்பட்டிருக்க லாம்.

இது நம் மனிதர்களின் ஹார்மோன்கள் மற்றும் சுரப்பிகளில் மாற்றங்கள் ஏற்படும் போது சில கட்டிகள் தோன்றுவது போல் இந்தக் கற்றாழையிலும் ஏற்பட்டுள்ளது. 
இது ஹார்மோன்களில் ஏற்பட்ட ஒருவிதத் தவறும் விபத்துமே இந்தக் கற்றாழை மலர்க்கொத்தின் பாம்பு போன்ற வளைவுக்கு காரணம். மற்றபடி வளைந் திருக்கும் கற்றாழை மலருக்கும் ஆன்மிகத்து க்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings