நிலவின் வட்ட பாதைக்குள் சென்ற சந்திரயான்-2 !

0
நிலவை பற்றி ஆய்வு செய்வதற் காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. 
நிலவின் வட்ட பாதைக்குள்




மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகர மாக விண்ணில் செலுத்தப்பட்டது.

புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்து, புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது.

பின்னர் பூமியை சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக அதிகரிக் கப்பட்டு, கடந்த 14ம் தேதி நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது.
நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2 விண்கலத்தை இன்று நிலவின் சுற்று வட்டப் பாதையில் சேர்க்க திட்டமிடப் பட்டது. 

அதன்படி சந்திராயனின் திரவ என்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் இயக்கப் பட்டது. 
சந்திரயான்-2




இதனால் நிலவை நோக்கி சீறிப் பாய்ந்த சந்திரயான்-2, நிலவின் வட்டப் பாதையில் வெற்றிகர மாக நுழைந்து நிலவை சுற்றி வருகிறது. 

இந்த முக்கியமான செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

28 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2-ம் தேதி பிரியும். 
அந்த லேண்டரின் சுற்றுப் பாதையானது இரண்டு முறை மாற்றி யமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப் படும். 

பின்னர் செப்டம்பர் 7-ம் தேதி லேண்டரை நிலவில் மெதுவாக தரையிறக்கு வதற்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings