சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஆங்கிலேயப் படையை எதிர்த்து போரிடவும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய ராணுவத்தை தொடங்கினார்.
முன்னாள் ராணுவ வீரர் இந்திரன் |
இந்தியாவின் பல்வேறு பகுதிகளி லிருந்து வீரம் மிக்க துடிப்பான பலர் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தனர். அந்தக் காலகட்டம் முதல் இப்போதுவரை வீட்டிற்கு ஒருவரை ராணுவத்திற்கு அனுப்பிக் கொண்டிருக் கிறது ஒரு கிராமம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?
தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ளது தர்மாபுரி என்ற கிராமம். சுற்றுவட்டார கிராம மக்கள், இதை ’ராணுவ கிராமம்’ என்றே அழைக்கி றார்கள். வீட்டிற்கு ஒருவர் இந்திய ராணுவத்தில் பணியாற்று வதால் இப்பெயர் பெற்றிருக்கிறது தர்மாபுரி கிராமம்.
`என்னுடைய பெயர் ஜெகத்ரட்சகன். எங்கள் கிராமத்தில் வீட்டிற்கு ஒருத்தர் ராணுவத்தில் இருப்போம். எனக்கு மூன்று அண்ணன்கள். அனைவருமே ராணுவத்தில் இருக்கிறார்கள். எம்.இ படித்திருக் கிறேன். எனது படிப்பிற்கு ஏற்ற தேர்வு எழுதி, ராணுவத்தில் உயர் அதிகாரி ஆக ஆசை.
அதற்காக முன்னேற் பாடுகளில் இருக்கிறேன். விரைவில் இந்திய ராணுவத்தில் அதிகாரியாகி, நாட்டிற்கு சேவை செய்வேன்” என கம்பீரமாகப் பேசுகிறார்.
முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் என்ற பெயரில், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை ஒருங்கிணைத்து தர்மாபுரி கிராமத்தில் சங்கம் ஒன்றை நடத்துகிறார்கள்.
கிராமத்தில் உள்ள இளைஞர்களை சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி அளிப்பதே அச்சங்கத்தினரின் பிரதான பணி. இளைஞர் களையும், மாணவர் களையும் உடலளவில் தயார் படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகிறார் முன்னாள் ராணுவ வீரர் இந்திரன்.
அவரிடம் பேசினோம். ``ராணுவத்தி லிருந்து ஓய்வு பெற்றவுடன், நேராக ஊருக்கு வந்து இங்கிருக்கும் இளைஞர் களையும், மாணவர் களையும் ஒன்றிணைத்து, ராணுவத்திற்கு எப்படி தயாராக வேண்டும் எனப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன்.
இதற்காக எந்தக் கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை. தமிழகத்தில் வேலூர் மாவட்டம் தான் அதிகப் படியான ராணுவ வீரர்களைக் கொண்ட மாவட்டம். அதற்கு அடுத்த படியாக தர்மாபுரி கிராமத்தால் தேனி மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
தேனி மாவட்டத்தை முதல் இடம் பிடிக்க வைப்பதே எங்களது குறிக்கோள்” என்றார் பெருமையாக. பள்ளிப் படிப்பு முடித்தவுடன், தமிழகத்தில் எங்கு ராணுவத் திற்கு ஆள் சேர்ப்பு நடந்தாலும், முதல் ஆளாக ஆஜராகி விடுகிறார்கள் தர்மாபுரி கிராமத்து இளைஞர்கள்.
அவர்களு க்குத் தேவையான அனைத்து உதவிகளையும், முன் தயாரிப்புப் பணிகளையும் கிராமத்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் செய்து கொடுக்கிறார்கள்.
பயிற்சியில் தர்மாபுரி இளைஞர்கள்! |
விடுமுறைக்கு தர்மாபுரி வந்திருந்த ராணுவ வீரர் தங்கப் பாண்டியிடம் பேசினோம். `பிளஸ் டூ முடித்தவுடன் ராணுவத்தில் சேர்ந்து விட்டேன். இப்போது காஷ்மீரில் பணி புரிந்து வருகிறேன்.
எப்போது விடுமுறைக்கு வந்தாலும், இங்கே வந்து இளைஞர் களுடன் உடற்பயிற்சி செய்வேன். அவர்களுடன் கபடி விளையாடுவேன். ராணுவத்தி ற்கு சீக்கிரம் வந்துவிடுங்கள் என ஊக்கப் படுத்துவேன்.
எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பல ராணுவ வீரர்கள், நாட்டிற்காக உயிர்தியாகம் செய்திருக் கிறார்கள். நான் தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு” என்றார் புன்னகையோடு.
விடுமுறைக்கு வரும் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் என எப்போதும் ராணுவ வீரர்களைச் சுற்றியே கிராமத்து இளைஞர் களும், மாணவர்களும் இருப்பதால்,
இயல்பாகவே ராணுவத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடும், தன்னை ஒரு ராணுவ வீரரைப் போலவும் எண்ணிக் கொள்வதைப் பார்க்க வியப்பாக உள்ளது.
Thanks for Your Comments