ஹாலிவுட் படங்களில் பார்த்து ரசித்து வியந்த ஒரு விஷயம் பறக்கும் கார். பெரு நிறுவனங்கள் பறக்கும் கார்களைத் தயாரிக்கும் முனைப்பில் இருந்தாலும் எதுவும் நடைமுறை க்கு வரவில்லை.
அவர்களின் சோதனை முயற்சிகளும் அவ்வளவாக வெற்றியடைய வில்லை.
இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் ஜாம்பவானான என்.இ.சி நிறுவனம் ட்ரோன் வடிவிலான ஒரு பறக்கும் காரை அறிமுகம் செய்துள்ளதோடு, அதை சில நிமிடங்கள் பறக்க விட்டு அசத்தியுள்ளது.
பேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கார் பறந்த காட்சிகள் வீடியோவாக் கப்பட்டு வைரலாகி விட்டது.
இந்த வாகனம் தான் எதிர்காலம்... என்று இணையத்தில் புகழ்கின்றனர். 2023-இல் ட்ரோன் காரை ஜப்பானின் சாலைகளில் நாம் பார்க்க முடியும். நன்றி குங்குமம்.....
Thanks for Your Comments