கடந்த வருடம் இதே நேரத்தில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி, அனைத்து மாவட்டங்களி லும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டனர்.
இம்முறை கேரளா மட்டும் இல்லாமல் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி ஒட்டிய பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. கோவையின் பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் அணைகள் வெகு விரைவாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அளிக்கும் முக்கிய தகவல்களை நாம் இங்கே காண்போம்.
இன்றைய வானிலை
தமிழகத்தின் பல்வேறு இடங்களில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்க ளான நீலகிரி, கோவை, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களி லும், குமரி மாவட்டத்தி லும் பரவலான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது
என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, மேலும் உள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்ச வெப்ப நிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். மழைக்கான வாய்ப்புகள் உள்ளன.
நேற்று அதிக அளவு மழையை பெற்ற இடங்கள்
கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் வரலாறு காணாத பருவமழை கொட்டி வருகிறது. சிரபுஞ்சிக்கு நிகரான மழையைப் பெற்ற அவலாஞ்சியில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் 35 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது.
இதனால் அப்பர் பவானி அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதே போன்று அப்பர் பவானியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. 19 செ.மீ மழை அங்கு பதிவாகியுள்ளது.
வால் பாறையின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. பல்வேறு தேயிலை தோட்டங்கள் மண் சரிவால் அடித்துச் செல்லப் பட்டன. தேயிலை தோட்டத் தொழிலாளர் களின் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
தமிழக கேரள எல்லையாக பார்க்கப்படும் சாலக்குடி – வால்பாறை சாலையில் மழையினால் மரங்கள் எல்லாம் கீழே சரிந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப் பட்டுள்ளது.
மழுக்குப் பாறை வழியாக கேரளா செல்பவர்கள், வால்பாறை செல்பவர்கள், அதிரப்பள்ளி, குரங்கு அருவி, ஆழியார் அணைக்கட்டு, சோலையாறு அணைக்கட்டு பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் தங்களின் பயணத்தை ரத்து செய்வது நல்லது.
சின்னக்கல்லாறு – 13 செ.மீ மழை
வால்பாறை – 8 செ.மீ
வால்பாறை தாலுக்கா அலுவகம் – 7 செ.மீ
Thanks for Your Comments