ஆரணி டவுன் பள்ளிகூடத் தெருவை சேர்ந்தவர் யோகனாந்தம். கடந்த மாதம் காட்டன் சூதாட்ட தகராறில் பழைய பஸ் நிலையம் அருகில் கொடூரமான் முறையில் கொலை செய்ய பட்டார்.
இவரது மனைவி ஆண்டனிமேரி நேற்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திர னிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
அப்போது தனக்கும் தங்களுடைய இரண்டு குழந்தைகள் பாதுகாப்பு இல்லை ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டார்.
மேலும் இந்த பகுதிகளில் உள்ள சிலர் எங்களை கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கூறினார்.
உடனடியாக நடவடிக்கை எடுக்க அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கோட்டாச்சியர் மைதிலியிடம் பரிந்துரை செய்தார்.
பின்னர் பாதிக்கபட்ட பெண் ஆண்டனிமேரி கூறியதாவது:-
என் கணவர் பெயர் யோகனாந்தம் எனக்கு காதல் திருமணம் ஆகையால் இருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் 11-ந் தேதி அன்று என் கணவர் யோகானந்தை அவரது உறவினர் பாண்டியன் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்தார்.
இதனால் தற்போது ஆதரவின்றி உள்ளோம். பள்ளிகூடத் தெருவை சேர்ந்த சுமார் 10 பேர் தங்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஆகையால் தனக்கு பாதுகாப்பு வேண்டி முதல்வர் குறைதீர்ப்பு முகாமில் அமைச்சர் சேவூர் ராமசந்திரனிடம் மனு அளித்துள்ளேன்.
இல்லை யென்றால் 1 வயது கைகுழந்தை 7 வயது பெண் குழந்தை ஆகிய என்னையும் சேர்த்து கருணை கொலை செய்ய வேண்டி கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Thanks for Your Comments