நம் உடல் எலும்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !

0
நம் உடலில் உள்ள எலும்புகள் உடலைத் தாங்கிப் பாதுகாக்கும் பணியைச் செய்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நம் உடல் எலும்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !
ஆனால் நம் உடல் எலும்புகள், உருவ அமைப்பை வரையறுப்பது மட்டுமன்றி மேலும் பல செயல்களைச் செய்கிறது. 

ரத்த செல்களை உருவாக்கு வதோடு, உடல் உள்ளமைப்பை கட்டுப் படுத்தும் வேலை களை எலும்புகள் செய்கிறது. மேலும் நம் மூளை, இதயம் மற்றும் நுரையீரல் களுக்கு பாதுகாவலனாக உள்ளது.

மனிதன் குழந்தையாக இருந்து வளரும்போது உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறன. உடல் வளர்ச்சி, உடல் இயக்கங்கள் என மனித வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் உடலில் உள்ள எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உடலுக்கு அடிப்படையாக மட்டுமல்லாமல், நம் உடல் வாழ பல முக்கியமான செயல் பாடுகளைச் செய்கிறது உடல் எலும்புகள். சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்கள் எலும்பின் மஜ்ஜையில் உற்பத்தியா கின்றன. 
நுரையீரல் மற்றும் உடலின் பல பாகங்களுக்கு ஆக்சிஜனை ஏந்திச் செல்லும் பணியை சிவப்பு ரத்த அணுக்கள் செய்கின்றன. அதே போல் வெள்ளை அணுக்கள் நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக் களுடன் போர் புரிகின்றன. 

இந்த வேலைகளை ஒரு சமநிலையில் வைத்திருப்பது என்பது ஒரு சுலபமான காரியம் அல்ல. இதற்குத் தான் எலும்புக் கூட்டில் பல விதமான எலும்பு கள் உள்ளன.

மனிதன் தன் வாழ்நாளில் ஒரு சில எலும்புகளை இழக்கின்றான். ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கின்றான். 

ஆனால் இறக்கும் போது இருப்பது 206 எலும்புகள் மட்டுமே. ஒரு குழந்தைக்குத் தேவை வளைந்து கொடுக்கக் கூடிய எலும்புக்கூடு. 

குழந்தை கருவில் சுற்றிவரவும், பிரசவத்தின் போது வெளியே வரும் பாதையைக் கடக்கவும் வளைந்து கொடுக்கக் கூடிய எலும்புகள் தேவைப் படுகிறது. 

இதற்கு குறுத்தெலும்புகள் மிக அவசியம். இந்த குறுத்தெலும்புகள் குழந்தை பிறந்தவுடன் இணைந்து, அந்தக் குழந்தை வளர வளர வலுவான எலும்பாக மாறும்.
நம் உடல் எலும்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !
இந்த எலும்பு மாற்ற நிகழ்வை ஆஸ்சிபிகேசன் (Ossification) என்பர். இது குழந்தை உருவான 13-வது வாரத்திலிருந்து தொடங்கி 20-வது வாரம் வரை நீடிக்கும். 

அதே நேரத்தில் வாழ்நாள் முழுவதும் எலும்பு மீளுருவாக்கம் நடைபெறும். மனித உடலுக்குள் எலும்புகளின் சுய சிகிச்சை முறை நடைபெறுகிறது. 

அதாவது, நம் எலும்புகள் உடலுக்குத் தேவையான கால்சியத்தை சேமித்து, பின்னர் வழங்கும் தன்மை பெற்றவை. இதனால் வளையும் தன்மையை மனித உடல் பெறுகிறது. 
மேலும், சுமார் 10 வருட காலத்தில் எலும்பு செல்கள் மீளுருவாக்கம் அடைகின்றன. முன்னர் கூறியபடி ஒவ்வொரு தசாப்த காலத்திலும் நமக்கு ஒரு புது உடல் கிடைக்கிறது என்று சொல்லலாம். 

ஆனால் நம் பற்கள் மட்டும் மீளுருவாக்கம் அடையாதவை. பல் மருத்துவர் கூறுவது போல் தினசரி இரு முறை பல் தேய்த்து அவற்றை பாதுகாப்பது மிக அவசியம்.

நம் மணிக்கட்டு வரை ஒவ்வொரு கையிலும் 27 எலும்புகளும், அதே போல் நம் பாத மணிக்கட்டு வரை ஒவ்வொரு காலிலும் 26 எலும்புகளும் உள்ளன. 

அதாவது, நமது இரு கை கால்களில் மட்டும் 50 சதவீத எலும்புகள் உள்ளன. அடுத்து, நமது காது கேட்கும் திறனுக்கு மூல காரணமாக இருப்பதும் எலும்புகள் தான். 

காதிலுள்ள ‘ஸ்டேப்ஸ்’ (Stapes) என்னும் எலும்பு தான் உடலிலேயே மிகச்சிறிய எலும்பு ஆகும். இது, 2.5 மில்லி மீட்டர் அகலம் உள்ளது. 

அளவில் சிறியதாக இருந்தாலும், ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல் காதில் ஒலி அதிர்வலைகளை ஏற்று, காது கேட்க வைப்பது இந்த எலும்பு தான். 

இதனால் தான் அனைத்து ஒலிகளையும் நம்மால் கேட்க முடிகிறது. சில நேரங்களில் நமது முழங்கை எதன் மீதாவது இடித்து விட்டால் மின்சார ‘ஷாக்’ அடித்தது போல வலியுடன் கூடிய அதிர்ச்சி ஏற்படும். 
நம் உடல் எலும்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !
இதற்கு காரணம் முழங்கையில் உள்ள எலும்பில் இணைந்துள்ள ‘உல்னார்’ என்ற நரம்பில் (Ulnar Nerve) அடிபடுவது தான். நமது முழங்கை யில் உள்ள நீண்ட எலும்பின் பெயர் ஹுமரஸ் (Humerus). 

இந்த எலும்பின் கீழ் இந்த நரம்பு அமைந்துள்ளது. இந்த நரம்பு தான் உடலிலேயே பாதுகாக்கப் படாத நரம்பு ஆகும்.

மனித உடலில் நாக்கின் கீழ் ஒரு எலும்பு உள்ளது. இதை ‘வி’ (V) எலும்பு என்பார்கள். மனித உடலில் உள்ள எலும்புகளில் இது ஒன்று தான் வேறு எலும்புடன் சேராமல் தனியாக அமைந்துள்ளது.
நாம் பார்க்கும் எலும்புக் கூடெல்லாம் பயமுறுத்துவது போல இருந்தாலும் மேற்கூறிய பல தீவிரமான வேலைகளைச் செய்ய எலும்புகள் உதவுகின்றன. உடலில் ஏற்படும் பதற்றத்தை தணிக்கவும் எலும்புகள் உதவுகின்றன. 

உடலில் உள்ள திசுக்களுக்கு கால்சியம் தந்து காப்பாற்றுகிறது. நீங்களும் உங்கள் பங்கிற்கு எலும்பின் வளர்ச்சிக்கு உதவலாம். அதற்கு கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். 

அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடலில் உள்ள எலும்புகளில் அடிபடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings