கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பகுதியில் பிரபல லுலு வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகம் சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் அந்த பகுதியில் கட்டப் பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதை யடுத்து சலீம் என்பவர் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று லுலு முறையாக கட்டப் பட்டதா? என்பது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், 'லுலு வளாகம் 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடிக்கு மேலாக கட்டப் பட்டுள்ளது.
இதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தான் அனுமதி தந்திருக்க வேண்டும்' என சலீம் குறிப்பிட்டி ருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய் மற்றும் ஜெயசங்கரன் நம்பியார் கொண்ட அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கு தொடர்பாக லுலு வளாகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு அந்த வளாக அதிகாரிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
இதில், 'முறையான அனுமதியுடன் தான் வளாகம் கட்டப் பட்டுள்ளது. குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடம் தான் லுலு வணிக வளாகம்.
அதன்படி, 3 லட்சம் சதுர அடிக்கு குறைவாக கட்டிடம் இருந்தால் மாநில சுற்றுச்சூழல் துறையே அனுமதி தரலாம். லுலு கட்டிடம் 2 லட்சத்து 32 ஆயிரம் சதுர அடிக்கு கட்டப் பட்டுள்ளது.
எனவே, மாநில சுற்றுச் சூழல் துறையிடம் அனுமதி பெற்று முறையாகத் தான் கட்டப் பட்டது' என குறிப்பிடப் பட்டுள்ளது.
இதனை யடுத்து வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள், லுலு வணிக வளாகம் அளித்த விளக்கத்துக்கு பதில் கூற, சலீமுக்கு கால அவகாசம் கொடுத்து வழக்கை ஒத்தி வைத்தனர்.
Thanks for Your Comments