அமெரிக்காவில் வந்து குடியேறு பவர்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்துவதற்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிரீன் கார்டு பெறுவதற்கான புதிய விதி முறைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று குடியேறுவதற்கு இந்தியா உட்பட மற்ற நாடுகளை சேர்ந்தவர் களுக்கு அதிகபட்ச வருமானம் இருக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.
அரசின் மருத்துவக் காப்பீட்டு, ரேஷன் மானியம் போன்ற நலத்திட்டங் களை அவர்கள் சார்ந்திருக் காமல் வருமானம் அதிக படியாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
இதனால் குறைந்த அளவு வருமானத்துடன் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் ஏராளமானோர் பாதிக்கப்படும் சூழல் உருவாகி யுள்ளது.மேலும் 4 லட்சம் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் இதனால் பாதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் அமெரிக்கர் களுக்கே அரசின் நலத்திட்டங்கள் அதிக அளவில் சென்றடையும் என்றும் அமெரிக்காவில் வந்து குடியேறுப வர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments