கட்டண உயர்வால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அலைமோதும் கூட்டம் !

0
யாத்ரீகர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவிடப் பட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அலைமோதும் கூட்டம்



பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத் துறையிடம் இருந்து எச்சரிக்கை வந்த நிலையில், அங்கு அமர்நாத் யாத்திரை மற்றும் மச்சாயில் மாதா யாத்திரை பக்தர்களையும் மற்ற சுற்றுலாப் பயணி களையும் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற அரசு உத்தர விட்டுள்ளது.
இதை யடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. இதனை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை கிடுகிடுவென உயர்த்தி யுள்ளன. 

ஸ்ரீநகரில் இருந்து டெல்லி செல்லும் விமான டிக்கெட்டின் விலை ரூபாய் 10000 முதல் 22000 வரை வசூலிக்கப் படுகின்றது. வழக்கமான கட்டணத்தை விட இது ரூ.3000 அதிகமாகும்.



ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு செல்வதற்கான கட்டணம் ரூபாய் 16000 வரை வசூலிக்கப் படுகின்றது. இதே போன்று அமிர்தசரஸ், சண்டிகார், ஜெய்ப்பூர் செல்வதற் கான கட்டணங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன. 
இணைய தளங்களில், அடுத்து வரும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஸ்ரீநகரிலிருந்து செல்லும் அனைத்து விமானங் களிலும் விமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘‘மக்கள் அனைவரும் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற பதற்றத்தில் உள்ளனர். ஸ்ரீநகரிலிருந்து டெல்லி செல்ல 12000 ரூபாய் கட்டணம் செலுத்தி செல்கிறோம்’’ என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings