கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் !

0
இந்தியாவில் முதன் முறையாக கொல்கத்தா வில் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது.
கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில்




மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா வில் உள்ள ஹூக்ளி ஆற்றை கடந்து செல்லும் வகையில், நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது.

பொதுவாக ஆறுகள் குறுக்கே இருந்தால் அங்கு மேம்பாலம் அமைத்து ரயில் பாதை அமைக்கப் படும். ஆனால் புது முயற்சியாக ஹூக்ளி ஆற்றில் நீருக்கு அடியில் சுரங்கப் பாதை வடிவமைக் கப்பட்டு, அதில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது. 
சுமார் 30 அடி ஆழத்தில், 520 மீட்டர் தூரத்துக்கு இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.

நீர்கசிவு ஏற்படாமல் இருக்க 3 அடுக்கு தடுப்புகளுடன் பாதுகாப்பான முறையில் அமைக்கப் பட்ட இந்த மெட்ரோ ரயில் பாதை பணி தற்போது முடிவடைந் துள்ளது.

இப்பாதையில் விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித் துள்ளார்.

இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் கடலுக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.




Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings