காணாமல் போன சிறுவன் 9 மாதங்களுக்கு பிறகு தாயுடன் சந்திப்பு !

0
தஞ்சையில் உள்ள குழந்தைகள் நலக்குழுமத்தில் 5 வயதான சிறுவன் தருண், கடந்த 20 நாட்களு க்கும் மேலாக தங்கி இருந்தான். கரூர் ரெயில் நிலையத்தில் பிச்சை எடுத்த போது சைல்டுலைன் அமைப்பினர் அவனை மீட்டனர். 
காணாமல் போன சிறுவன் 9 மாதங்களுக்கு பிறகு தாயுடன் சந்திப்பு



தஞ்சையை சேர்ந்தவன் என தகவல் கிடைத்ததை யடுத்து அவன் தஞ்சையில் உள்ள குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப் பட்டான். அவன் தனது தாய் சித்ரா என்றும், தந்தை சுரேஷ் என்றும், தனக்கு ராகவா என்ற தம்பி உள்ளதாகவும் தெரிவித்தான். 

இது தொடர்பான செய்தி பத்திரிகைகளில் வெளியானது. பத்திரிகையில் வந்த செய்தியை வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் பதிவிட்டனர்.

சகோதரிகள்

இதனைப் பார்த்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த வசந்தி என்பவர், தஞ்சையில் உள்ள குழந்தைகள் நலக்குழு தலைவர் திலகவதியை தொடர்பு கொண்டு சிறுவன் தருண், தனது மகன் என்று கூறினார். 
அதைக் கேட்ட திலகவதி, சிறுவன் தனது தாய் சித்ரா என்று கூறுகிறான். நீங்கள் உங்கள் பெயரை வசந்தி என்று கூறுகிறீர்கள். எனவே ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் எடுத்துக் கொண்டு நேரில் வாருங்கள் என தெரிவித்தார்.

இதனை யடுத்து வசந்தி தனது மாமியார் லட்சுமி மற்றும் உறவினர்கள் 5 பேருடன் உரிய ஆவணங் களுடன் நேற்று காலை தஞ்சை வந்தார். அப்போது வசந்தியிடம், சிறுவன் தனது தாய் பெயர் சித்ரா என கூறியது குறித்து கேட்டார். 

அதற்கு வசந்தி நானும், சித்ராவும் சகோதரிகள். நாங்கள் இருவரும் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டோம். எனக்கு 4 குழந்தைகளும், சித்ராவுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். 

எனது இன்னொரு மகனுக்கு உடல்நிலை சரி யில்லாததால் நான் அவனை கவனித்து வந்தேன். தருணை எனது தங்கை சித்ரா வளர்த்து வந்தார்.

காணாமல் போய் விட்ட...



எனது கணவர் சுரேஷ் மது குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்வார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் தருணை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி சென்ற அவர் அங்கு பஸ் நிலையத்தில் அவனை விட்டு விட்டு சென்று விட்டார். 

சிறிது நாட்கள் கழித்து திரும்பி வந்த எனது கணவர், தருண் காணாமல் போய் விட்டதாக என்னிடம் தெரிவித்தார். ஆனால் அவர் அடிக்கடி பொய் சொல்வதால், பொய் தான் சொல்கிறார் என எண்ணி தேடாமல் இருந்தோம். 

ஆனால் 3 மாதம் ஆகியும் தருண் குறித்து எந்த தகவலும் தெரியாததால் பல இடங்களில் அவனை தேடினோம். எங்கு தேடியும் அவன் கிடைக்க வில்லை. நாங்கள் கூலி வேலை செய்து வந்தோம். பண வசதி இல்லாததால் போலீசிலும் புகார் தெரிவிக்க வில்லை.

ஆவணங்கள் ஒப்படைப்பு

இந்த நிலையில் தஞ்சையில் உள்ள குழந்தைகள் நலக்குழுமத்தில் எனது மகன் இருப்பதாக வாட்ஸ் -அப்பில் வந்த பதிவை ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அதன் பேரில் இங்கு வந்தோம் என கூறினார். 
இதை யடுத்து அவர் கொடுத்த ஆவணங்கள், புகைப் படங்களை குழந்தைகள் நலக்குழுவினர் சரிபார்த்தனர். இருப்பினும் வசந்தி உண்மையான தாய் தானா? என்பதை அறிந்து கொள்வதற்காக குழந்தைகள் நலக்குழுவினர் அவரை அங்கு மறைந்து நிற்குமாறு கூறினார்கள். 

அதன்படி அவர் அங்கு மறைந்து நின்றார். பின்னர் பள்ளிக்கு சென்று இருந்த சிறுவன் தருணை, குழந்தைகள் நலக்குழுமத்தை சேர்ந்தவர்கள் அங்கு அழைத்து வந்தனர்.
ஆவணங்கள் ஒப்படைப்பு



நெகிழ்ச்சியான காட்சி

அப்போது அங்கு மறைந்திருந்த வசந்தி சிறுவன் கண்ணில் பட்டார். உடனே அவன் துள்ளிக் குதித்தவாறு தாயின் இடுப்பில் ஏறிக்கொண்டான். அப்போது தாயும், மகனும் ஆனந்த கண்ணீர் விட்டனர். 

சிறுவன் தனது தாயிடம் ஏனம்மா... என்னை விட்டு விட்டு சென்றாய். நான் எங்கெல்லாம் அலைந்தேன் என்று கண்ணீர் விட்டபடி கூறினான். அப்போது வசந்தி தனது மகனை கட்டி யணைத்து முத்தமழை பொழிந்தார்.
இதனைப் பார்த்த அங்கிருந்த பொது மக்கள், உறவினர்கள் கண்ணீர் விட்டனர். சிறுவனின் தாய் மற்றும் உறவினர்கள், குழந்தைகள் நலக்குழுமத் தினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். 

அதன் பின்னர் சிறுவன் தனது தாயுடன் சேர்ந்த மகிழ்ச்சி யுடன் அங்கிருந்து விடைபெற்று சென்றான். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings