பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த மிகப்பெரிய தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
அவருக்கு அடுத்த படியாக தேசிய தலைவர் பதவியை ஏற்று, அக்கட்சியை சரிவில் இருந்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லப் போகும் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த முறை தலைவர் தேர்வு ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ராகுலின் சகோதரி பிரியங்கா காந்திக்கு அந்த வாய்ப்பு அளிக்கப் படலாம்.
அல்லது, இந்திரா காந்தி குடும்பத்தை சேராத அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் தலைவராக வரலாம் என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வரும் 10-ம் தேதி அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது தீர்மானிக்கப் படவுள்ளது.
Thanks for Your Comments