பி.வி.சிந்து தங்கம் வெல்ல காரணம் - வீடியோ வெளியிட்ட ஆனந்த் !

0
25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை எதிர் கொண்டார். 




ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய பி.வி. சிந்து முதல் சுற்றில் முன்னிலை வகித்தார். பின் இறுதியில் 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கம் வென்றார். 

உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை 42 ஆண்டுகளு க்கு பிறகு பி.வி.சிந்து. சாதனை படைத்து, தங்க மங்கையாக முத்திரை பதித்துள்ளார்.
பி.வி.சிந்துவு க்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, பி.வி.சிந்து கடுமை யாக பயிற்சி செய்த வீடியோவினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘மிருகத்தனமானது. இதனை கண்டு நான் களைத்துப் போயிருக் கிறேன்.




இப்போது அவர் எப்படி உலக சாம்பியன் ஆனார் என்பதில் எந்த மர்மமும் இல்லை. 

வளர்ந்து வரும் இந்திய விளையாட்டு வீரர்களின் ஒட்டு மொத்த தலைமுறை யும் இவரது வழியைப் பின்பற்றும். மேலும் முதலிடத்தைப் பெற தேவையான அர்ப்பணிப்பை எவ்வித தயக்கமும் இன்றி செய்து முடிக்கும்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவினை பலரும் சமூக வலைத் தளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இதனால் பி.வி. சிந்துவுக்கு மேலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings