இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்தி ற்குள் ஊடுருவி யிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்ட மிட்டிருப்பதா கவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
உளவுத் துறையின் இந்த எச்சரிக்கை யைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத் தும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆணையாளர் களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் கடலோர பகுதிகளில் சந்தேகத்திற் கிடமான படகுகளை கண்காணிக் கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நேற்று இரவு முதலே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் ஊடுருவி யிருக்கும் 6 பயங்கரவாதி களும் கோவையில் பதுங்கி யிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.
கோவை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது இடங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர்.
நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதி களில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை கூறி உள்ளது.
பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களின் புகைப் படங்களை கோவை போலீசார் வெளியிட்டு உள்ளனர். 6 பயங்கரவாதிகளில் 3 பேரின் படங்கள் வெளியிட ப்பட்டு உள்ளது.
Thanks for Your Comments