அடுத்த 3 மாதங்களில் அனைத்து வகையான கட்டடங் களிலும் மழை நீர் சேகரிப்பை நிறுவா விட்டால் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தல் வெளி யிட்டுள்ளார்.
சென்னையில் இன்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியிருப் பதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டடங் களிலும் அடுத்த 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவா விட்டால் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தி யுள்ளார்.
வீடுகள், தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் என அனைத்து விதமான கட்டடங் களிலும் மழை நீர் சேகரிப்பை அமைக்க வலியுறுத்தி யிருக்கிறார் அமைச்சர் வேலுமணி.
தொழில் நிறுவனங்கள், தங்கள் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு மையத்தை அமைக்க 6 மாத காலம் அவகாசம் கேட்ட நிலையில், தமிழக அரசு 3 மாத கால அவகாசம் வழங்கி யுள்ளது.
Thanks for Your Comments