திருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்கு... கேமராவில் சிக்கின !

0
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானம் சேஷாசலம் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் பலவித அபூர்வ விலங்குகளும், பறவைகளும் உள்ளன. 
திருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்கு



திருப்பதி வனத்துறையினர் இங்கு மரங்களை வளர்த்து காடுகளை பாதுகாப்பதுடன், விலங்குகளை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். 

இதன் அடிப்படையில் வனத்துறையினர் 2,700 ஹெக்டேர் வனப்பகுதியில் இரவிலும் படம் பிடிக்கக் கூடிய நவீன தானியங்கி கேமராக்களை பொருத்தினார்கள்.
இந்த கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது அதில் அபூர்வமான, அழிந்துவரும் இனமான 4 கொம்பு மான் இருந்தது தெரிந்தது. 

இது தவிர ஆசிய பனை புனுகுப்பூனை, இந்திய காட்டு நாய், சாம்பல் நிற காட்டுக்கோழி, சிறுத்தை, கீரி, சுட்டி மான், முள்ளம்பன்றி, சாம்பார் மான், 
 
சோம்பல் கரடி ஆகிய உயிரினங்களும் இந்த வனப்பகுதியில் இருப்பது அந்த கேமராக்களில் பதிவாகியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings