சர்வதேச விண்வெளி மையத்துக்கு, ரஷ்யா ஏற்கெனவே சில முறை மனிதர்களை அனுப்பிய போதும், கடந்த முறை சோயுஸ் ராக்கெட் இது போன்ற பயணத்தில் தோல்வி கண்டது.
இதை யடுத்து விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு, ஆபத்து காலத்தில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் உதவுவதற் காகவும் ஃபெடர் என்ற பயிற்சி ரோபோவை தெற்கு கஜகஸ்தானில் இருந்து சோயுஸ் எம்.எஸ் 14 விண்கலம் மூலம் ரஷ்யா அனுப்பியது.
செப்டம்பர் 7-ம் தேதி வரை தங்க வைக்கத் திட்ட மிடப்பட்ட அந்த ரோபோ, கடந்த சனிக்கிழமை சர்வதேச விண்வெளி மையத்தில் இணையத்தில் தோல்வி கண்டது.
இது ரஷ்யாவின் விண்வெளித் திட்டங்களின் எதிர் காலத்தை கேள்வி குறியாக்கி விட்டதாகக் கூறப்பட்டது.
ஆய்வுக்குப் பின், சர்வதேச விண்வெளி மையத்தில் தானியங்கி லாக் அமைப்பு சரிவர செயல் படாததால் தான் இணைவதில் தடுமாற்றம் ஏற்பட்டதாக நாசா கூறியது.
இதை யடுத்து இன்று ரஷ்யாவின் ஃபெடர் என்ற ஹ்யமனாய்ட் ரோபோ சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றி கரமாகத் இணைந்தது.
ஏற்கெனவே 2011-ல் ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிப்பில் நாசா அனுப்பிய ரோபனாட் 2 ரோபோ, டொயோடோ தயாரிப்பில் 2013-ல் ஜப்பான் அனுப்பிய கிரோபோவும் அனுப்பியதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments