பிரபல இளம் நடிகரின் திடீர் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அசாமிய சினிமா உலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வந்தவர் கிஷோர் தாஸ்.
30 வயதே ஆன கிஷோர் தாஸ் பல படங்களில் நடித்துள்ளார். அதோடு 300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களிலும் நடித்து உள்ளார்.
ஏன் ப்ர்ட்ஜில் வைக்கப்படும் பொருள் கெடுவதில்லை !
கடைசியாக அசாமி மொழியில் வெளியான 'தாதா துமி டஸ்டோ போர்' என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதற்காக கவுகாத்தியில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த வருடம் மார்ச் மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கிஷோர் தாஸுக்கு சமீபத்தில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதனால் கிஷோர்தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கிஷோர் தாஸ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
இதனால் கிஷோர் தாஸின் இறுதி சடங்குகள் சென்னையிலேயே நடந்துள்ளன. கிஷோர் தாஸ் மறைவுக்கு அசாம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
தசைப் பிடிப்பு தடுப்பது எப்படி?
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம் நடிகர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Thanks for Your Comments