அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நேஷ்வில்லேவில் இருந்து பிலடெல்பி யாவுக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத் துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது.
விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது பயணி ஒருவர் தனது சூட்கேசை வைப்பதற்காக ‘லக்கேஜ்’ பகுதியை திறந்தார்.
அப்போது ‘லக்கேஜ்’ பகுதிக்குள் விமான பணிப்பெண் ஒருவர் படுத்திருந்ததை பார்த்து திகைத்துப் போனார்.
பின்னர் அந்த பயணி, பணிப்பெண்ணை கீழே இறங்க அறிவுறுத்திய போது, 10 நிமிடங் களுக்கும் மேலாக அவர் இறங்க மறுத்து அடம் பிடித்தார்.
பயணிக ளுக்கு வேடிக்கை காட்டுவதற் காக பணிப்பெண் இவ்வாறு செய்ததாக விமான ஊழியர்கள் கூறினர்.
ஆனாலும் இதனை சகித்துக் கொள்ளாத பயணி ஒருவர், விமானம் பிலடெல்பியா வில் தரை யிறங்கியதும் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத் திடம் இது தொடர்பாக புகார் அளித்தார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம் “வாடிக்கை யாளர்களை சிரிக்க வைக்கும் நோக்கிலேயே பணிப்பெண் அவ்வாறு செய்தார்.
எங்கள் பணிக்குழுவினர் அவ்வப்போது இது போன்ற வேடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம் தான்.
அதே சமயம், பயணிகளின் பாதுகாப்பில் நாங்கள் எவ்வித சமரசமும் செய்வதில்லை” என தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments