இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக பணிபுரிந்து வருபவர் ஷாலிஜா தாமி. இவர் கடந்த 15 வருடங்களாக விமானப் படையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது இவருக்கு விமானப் படையில் விமானத்தின் காமாண்டர் பதவி அளிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவி லேயே விமானப் படையின் விமானத்தை இயக்கும் முதல் பெண் கமாண்டர் என்ற பெருமையை தாமி பெற்றுள்ளார். இவர் உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் ஹிந்தான் விமான தளத்தில் சேத்தக் (Chetak) ரக ஹெலிகாப்டரை இயக்கி யுள்ளார்.
சேத்தக் ரக ஹெலிகாப்டர் மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகம் செல்ல கூடியது. இந்த ஹெலிகாப்டர் நிவாரண பொருட்கள் அளிப்பதற்கும், அவரச மருத்துவ உதவி அளிக்கவும், தேடும் பணிக்கும், பாதுகாப்பு ஆய்வு பணிக்கும் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
இவ்விமானத் தில் 2ஆவது கமாண்டராக தாமி நியமிக்கப் பட்டுள்ளார். அதாவது விமானத்தின் தலைமை கமாண்டருக்கு அடுத்தப் பதவியாக இப்பதவி கருதப் படுகிறது.
தாமியின் நியமணத்தை தொடர்ந்து விரைவில் விமானப் படையின் விமானத்தை இயக்கும் தலைமை கமாண்டராக பெண்கள் பதவி பெற அதிக வாய்ப்பு ஏற்பட் டுள்ளது.
Thanks for Your Comments