ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ சட்டப் பிரிவு ரத்து செய்யப் பட்டது. அந்த மாநிலத்தை ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.
இதனை யடுத்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் பட்டுள்ளன. போலி செய்திகள், வதந்திகள் பரவலை தடுக்க தொலைத் தொடர்பு சேவைகளு க்கும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில், காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கர வாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர்.
இரு தரப்பினரு க்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில் பயங்கர வாதிகள் தரப்பில் ஒருவன் சுட்டு கொல்லப் பட்டான். சிறப்பு காவல் அதிகாரி ஒருவரும் இதில் உயிரிழந்து உள்ளார்.
Thanks for Your Comments