பேராசிரியர் பணிக்கு பணம் கறக்க தனியா ஆபீஸ் - wiki யானந்தா !

0
‘‘தமிழ்நாட்டுல கலைக் கல்லூரி மற்றும் பிஎட் கல்லூரியில இருக்குற காலியிடங் களுக்கு 2,340 உதவி பேராசிரியருங்கள விரைவில் நியமனம் செய்யப் போறாங்களாமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
பேராசிரியர் பணிக்கு பணம் கறக்க தனியா ஆபீஸ்



‘‘ஆமா.. இதற்கான அறிவிப்ப நேற்று முன்தினம் இரவு தான் டிஆர்பி வெளியிட்டது. ஆனா, அறிவிப்பு வெளியான சில மணி நேரத்துலேயே, இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி பணம் சம்பாதிக்க ஒரு குரூப் ரெடியாகிருச் சாம். 
அதுவும் பணம் வாங்குற துக்காக முதல்வர் மாவட்டத்துலயே ஆபிஸ் ஆரம்பிக்கவும் தயாரா கிட்டாங்களாம். சென்னையில இருந்து சேலம் அரசு கலைக் கல்லூரிய இயக்கும் ஒருத்தரு இந்த வேலைய முன்னின்று நடத்த ரெடியாகிட்டாரு. 

முதல்ல, கவுரவ விரிவுரை யாளருங்கள பிடிச்சு பேச ஆரம்பிச் சுருக்காங்க. எக்ஸாமுக்கு அப்ளை பண்ணிட்டு செட், நெட் தகுதியிருந்தா ₹12 லகரமும், அந்த தகுதி எதுவும் இல்லனா, ₹15 லகரமும் கொடுத்தி டுங்கனு பேச்சு வார்த்தை நடக்குது. 

அதுவும் பணத்த ஒரே தவணையா கொடுத்தா, போஸ்டிங் போடுறது எங்க வேலைனு உத்தரவாதம் கொடுக்கு றாங்களாம். 

இதுக்காக சேலம் காலேஜ்ல இங்கிலீஷ் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் துறைய சேர்ந்த 2 உதவி பேராசிரியர் களையும், ஆத்தூர் காலேஜ்ல இங்கிலீஷ் உதவி பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை கவுரவ விரிவுரை யாளரையும் நியமனம் பண்ணிருக் காங்களாம். 

இப்போ, இதுக்குனு ஆபிஸ் போடுறதுக்கு தான் இடத்த தேடிட்டு இருக்காங் களாம். இதேமாதிரி, ராசிபுரம், நாமக்கல்னு மாநிலம் முழுசும் இருக்குற கவுரவ விரிவுரை யாளருங்ககிட்ட பேச்சுவார்த்த நடத்திகிட்டு இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சொசைட்டி கடனுதவிக்கு வசூல் ஜரூரா நடக்குதாமே..’’

‘‘கோவை மாநகராட்சி வளாகத்தில் ஒரு கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டில தான் இது நடக்குது. இங்கு, மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி, இதர அரசுத்துறை ஊழியர்கள் பலரும் உறுப்பினர்க ளாக உள்ளனர். 

இந்த ெசாசைட்டி சார்பில், உறுப்பினர் களுக்கு, நிபந்தனை களுக்கு உட்பட்டு, அதிக பட்சமாக ₹5 லட்சம் வரை கடனுதவி அளிக்கிறார்கள். 
இதை பயன்படுத்திக் கொண்டு, இந்த ெசாசைட்டி நிர்வாக பொறுப்பில் இருக்கும் சிலர், ஒவ்வொரு அப்ளிகேசனு க்கும் தலா ₹40 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை லஞ்சமாக பெற்றுக் கொண்டு, விண்ணப்பங் களை சரி பார்த்து, பரிந்துரை செய்கின்றனர். 



சம்திங் கொடுக்காத நபர்களின் விண்ணப்பங் களை, பரிசீலனை என்ற பெயரில் கிடப்பில் போட்டு விடுகின்றனர். இதனால், வேறு வழியில்லாமல், ஊரோடு ஒத்துப்போ... என்ற கதையில் அவர்களும் சம்திங் கொடுத்து விட்டு, கடனுதவி பெறுகின்றனர். 

ஆளும்கட்சி முக்கிய புள்ளிகள் உதவியுடன் இந்த வசூல் வேட்டை ஜரூராக நடக்கிறது. இந்த சொசைட்டி செயல் பாடுகளை கண்காணிக்கும் தனி அலுவலரால் எந்த நடவடிக்கை யும் எடுக்க முடியவில்லை. 
மார்பில் அதிக முடி? அதிர்டமா?
ஆளும்கட்சி தலையீடு அதிகம் இருப்பதால், அவரும், நமக்கு எதுக்குப்பா வம்பு என ஒதுங்கிக் கொள்கிறார்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேலூர் மாவட்டத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கான அனுமதியை புதுப்பிக்க வேண்டும். 

அதன்படி இந்தாண்டு பள்ளிகளை புதுப்பிக்க வருபவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ் மாதங்களில் வரும் தீப விழா வரும் மாதத்தின் பெயரை கொண்டவர் வசூலில் கலக்கி வருகிறாராம்.

குறிப்பாக தனியார் பள்ளிகளிடம் ₹40 ஆயிரம் வரை வாங்கிய பின்னரே அனுமதியை புதுப்பித்து உத்தரவை வழங்கி வருகிறாராம். ₹40 ஆயிரத்திற்கு குறைவாக இருந்தால் அவர்களை கண்டு கொள்வதே இல்லையாம். 

இந்நிலையில், அரசு நிதியுதவி பள்ளிகளை புதுப்பிக்க வந்தவர்களிடம் ₹40 ஆயிரம் பணம் கேட்டதாக கூறப்படு கிறது.

இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த அவர்கள் பள்ளிகளின் அனுமதியை புதுப்பிக்க வருபவர்களிடம் பணம் பெறுவதாக கூறி பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு புகார்களை அனுப்பி வருகிறார்களாம். 

தற்போது இது தான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக த்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாவட்ட பிரிப்பில் பிரச்னையாமே..’’

‘‘விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு, நெல்லையை பிரித்து தென்காசி, வேலூரை பிரித்து ராணிப் பேட்டை, திருப்பத்தூர் என வரிசையாக 5 புதிய மாவட்டங் களை அடுத்தடுத்து தமிழக அரசு அறிவித்தது. 
இதை யடுத்து மயிலாடுதுறை, ஆரணி, செய்யாறு, அரக்கோணம் ஆகிய பகுதிகளையும் மாவட்டங்க ளாக அறிவிக்கக் கோரி நாள் ேதாறும் போராட்டங்கள் உருவெடுத் துள்ளன. 



நெல்லையை பிரித்து தென்காசி என தனி மாவட்டம் அறிவிப்பை தொடர்ந்து எந்த தாலுகாவை நெல்லையில் சேர்ப்பது, தென்காசியில் சேர்ப்பது என்பது அதிகாரிகளுக்கு தலை வலியாக மாறி விட்டது.
சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக் களை புதிய மாவட்டமான தென்காசியில் சேர்ப்பதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். ஆளுங்கட்சி யினரும் இந்த பகுதியை புதிய மாவட்டத்தில் சேர்ப்பதை விரும்ப வில்லை. 

வைகோவும் அவரது பகுதியை தென்காசியில் சேர்ப்பதை ரசிக்க வில்லை. இந்த இரண்டு தாலுகாக்க ளும் தென்காசியில் சேர்க்காமல் போனால் மாவட்ட பிரிவினை என்பதே அர்த்தம் இல்லாமல் போய் விடும் என்கின்றனர் அதிகாரிகள். 

இதனால் எந்த தாலுகாவை தென்காசியில் சேர்ப்பது, எதை நெல்லையில் சேர்ப்பது என்பது அதிகாரிகளுக்கு பெரும் குடைச்சலாக மாறி உள்ளதாம். 
எம்பி தொகுதிப்படி பிரித்தால் மட்டுமே நிர்வாகம் வசதிப்படும் என்கிறது அதிகாரிகள் வட்டாரம். பிரச்னையை சமாளித்து எப்படி மாவட்டம் பிரிப்பு அறிவிப்பை வெளியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது’’ என்றார் விக்கியானந்தா. தினமலர்..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings