ஹாங்காங் போராட்டகாரர்களின் வீடியோ வெளியிட்ட சீன ராணுவம் !

0
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு, சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக் கட்டுப் பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
ஹாங்காங் போராட்டகாரர்களின் வீடியோ



இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத் துக்கு ஒப்பந்தம் செய்து கொண்ட ஹாங்காங், சீனாவுடன் மட்டும் ஒப்பந்தம் செய்து கொள்ள வில்லை.

பல ஆண்டுகளாக நடந்து பேச்சு வார்த்தைக்கு பிறகு, ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கு கிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் எதிர்க் கட்சியினரும், பொது மக்களும் போராட்டத்தில் குதித்தனர். லட்சக்கணக் கான மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் ஹாங்காங் ஸ்தம்பித்தது.

மக்களின் தொடர் போராட்டத் துக்கு ஹாங்காங் நிர்வாகம் அடிபணிந்தது. கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப் பட்டதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லேம் கடந்த மாதம் அறிவித்தார்.

ஆனால் சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தடுக்கும் நடவடிக்கை யில் உள்ளூர் போலீசார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 



மேலும், சீனாவின் இராணுவ த்தின் ஒரு பிரிவும் ஹாங்காங்கிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். ஆனால் சீன ராணுவத்தினர் போராட்டக் காரர்களை ஒடுக்கும் எந்த ஒரு நடவடிக்கை யிலும் தற்போது வரை ஈடுபடவில்லை.

இந்நிலையில், போராட்ட காரர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் சீன ராணுவம் கலவரத்தில் ஈடுபடுபவர் களை ஒடுக்குதல், மற்றும் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபடுவது போன்ற ஒத்திகை வீடியோ வெளி யீட்டுள்ளது. 
உயரமாக இருப்பது நம் உடல்நிலையை பாதிக்குமா?
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது ராணுவத்தின் கடமை என குறிப்பிட்டுள்ளது. மேலும், போராட்ட காரர்களை எச்சரிக்கும் வாசகமாக “ எல்லா விழைவு களுக்கும் நீங்கள் தான் பொறுப்பு” என்கிற வாசமும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

சீன ராணுவம் வெளீயிட்ட இந்த வீடியோவால் ஹாங்காங் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings