வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்க ளான விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் மற்றும் பிராங்க் வொரெல் ஆகியோருடன் சிசில் ரைட்டின் பெயர் இடம் பெறாது.
ஆனால், அதிக காலம் கிரிக்கெட்டில் நீடித்ததில் சிசில் பெயர் நிச்சயம் இடம் பெறும். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான சிசில்(85), அடுத்த இரண்டு வாரங்களில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவ தாக அறிவித்தார்.
சிசில், தனது உயரிய காலத்தில் பார்படாஸு க்கு எதிராக ஜமைக்காவை பிரதிநிதித்துவப் படுத்தினார். இதனை யடுத்து 1959ஆம் ஆண்டு இங்கிலாந்து க்குச் சென்றார். அங்கு ஒரு அமைப்பில் நிபுணராக தொழில் ஒன்றை தொடங்கினார்.
மூன்று வருடங்களு க்கு பின்னர், எதிர்கால மனைவி எனிடை கண்ட பின்னர் இங்கிலாந்தில் தங்க முடிவெடுத்தார்.
1970களின் பிற்பகுதியி லும் 1980களின் முற்பகுதியி லும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்க ளான ரிச்சர்ட்ஸ் மற்றும் ஜோயல் கார்னருடன் விளையாடிய ரைட், 60 வருடங்களில் 7,000 விக்கெட்டு களை வீழ்த்தியுள்ளார்.
ஒரு தருணத்தில் 5 சீசன்களில் 538 விக்கெட்டு களை வீழ்த்தினார். ஒவ்வொரு 27 பந்துகளிலும் ஒரு விக்கெட் எனும் விகிதத்தில் இவர் விளையாடி யுள்ளார். கிரிக்கெட் வீரர் பைபில் விஸ்டன், ரைட்சின் திறன் குறித்து பேசியிருந்தார்.
கடைசியாக, அவரது கெரியரில் ஸ்டம்புகளை இழுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை ஏற்றுக் கொண்டார். இது குறித்து சிசில் கூறுகையில், ‘என்னுடைய நீண்ட நாள் கிரிக்கெட் வாழ்க்கைக் கான காரணம் தெரியும்.
ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் அனைத்தையும் சாப்பிடுவேன். ஆனால் குடிக்க மாட்டேன்.
உடல் வலி ஏற்படும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் ஆக்டிவாக இருப்பேன். இதுவரை ஒரே இடத்தில் அமர்ந்து டிவி பார்த்தது கூட இல்லை. அது எனக்கு பிடிக்காது.
அதற்கு பதிலாக நடைப்பயிற்சி மேற்கொள்வேன். கிரிக்கெட் வாழ்க்கைக்கு வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் ஓய்வளிக்கிறேன்’ என கூறினார்.
Thanks for Your Comments