தேனி சாலை சிக்னல் பைப்பில் கொட்டிய தண்ணீர் - டிரெண்டான வீடியோ !

0
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது கே.கே.பட்டி. இக்கிராமத் திலிருந்து சுருளிப்பட்டி செல்லும் பிரதான சாலை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு நாள்களுக்கு முன்னர் சோலார் சிக்னல் ஒன்று அமைக்கப் பட்டது. 
தேனி சாலை சிக்னல் பைப்பில் கொட்டிய தண்ணீர்



அந்த சிக்னல் பைப்பிலிருந்து நேற்று திடீரென தண்ணீர் கொட்டியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். பலரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

அருகில் இருந்த கடைக்காரர்கள் சிலர், அந்தத் தண்ணீரை பிடித்துச் சென்றனர். தொடர்ச்சி யாக தண்ணீர் கொட்டியதால், அப்பகுதி சாலையில் தண்ணீர் வெள்ளமெனப் பாய்ந்து கொண்டிருந்தது.
பின்னர் கம்பம் நகராட்சி யிலிருந்து கே.கே.பட்டிக்குச் செல்லும் தண்ணீர் பைப்பினை துளையிட்டு, சிக்னல் பைப் நடப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. 

'சிக்னல் பைப்பில் இருந்து கொட்டிய தண்ணீர்!' - தேனியில் டிரெண்டான வீடியோ | #Theni #TrafficSignal

விவரங்களுக்கு : http://bit.ly/2Z57cO3
Posted by Junior Vikatan on Wednesday, August 14, 2019




உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு, சிக்னல் பைப் அகற்றப்பட்டு, தண்ணீர் பைப் சரி செய்யப் பட்டது. இரண்டு நாள்களாக தண்ணீர் விநியோகம் இல்லாததால் பிரச்னை ஏதுமின்றி சிக்னல் பைப் இருந்துள்ளது. 
தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் செல்வதால் கே.கே. பட்டிக்கு தண்ணீர் சப்ளை செய்துள்ளனர். அதன் பின்னரே நடந்த களேபரம் கண்களுக் குத் தெரிந்துள்ளது. 

இச்சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட் டுள்ளனர். தற்போது, தேனி மாவட்டத்தில் டிரெண்டிங் ஆனது இந்த வீடியோ தான்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings